அடக்கொடுமையே.. தம்பியாகவே நினைத்தவரின் குடும்பத்தில் பொறுக்கித்தனம்.. பிஸ்மி பகீர்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் இடையே ஏற்பட்டுள்ள பஞ்சாயத்து ஒட்டுமொத்த திரைத்துறையையே பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது. இதுவரை பல இசையமைப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள், நடிகைகளுடன் நடிகர் சிவகார்த்திகேயன் பணியாற்றி உள்ள நிலையில், யாருமே அவர் குறித்து ஒரு வார்த்தைக் கூட தப்பாக பேசியதில்லை.

இந்நிலையில், இசையமைப்பாளர் டி. இமான் திடீரென சிவகார்த்திகேயன் மீது இப்படியொரு வெளிப்படையான குற்றச்சாட்டை முன் வைத்திருப்பதற்கு பின்னணியில் மிகப்பெரிய துரோகம் நடந்திருப்பதாக பலரும் கருதுகின்றனர்.

Valaipechu Bismi indirectly attacks Sivakarthikeyan on D Imman issue?

வலைப்பேச்சு பிஸ்மி தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ள விஷயம் ரசிகர்களை பதை பதைக்க வைத்துள்ளது.

சிவகார்த்திகேயன் - தனுஷ் மோதல்: சினிமாவில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் உள்ளே நுழைந்து தனது திறமையால் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் நடிகர் தனுஷ் 3 படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைத்த நிலையில், அவரது தயாரிப்பில் எதிர்நீச்சல், காக்கிச் சட்டை உள்ளிட்ட படங்களில் மாஸ் ஹீரோவாக்கி அழகு பார்த்தார். ஆனால், அதன் பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிவகார்த்திகேயன் தனுஷை விட்டு வெளியே வந்த நிலையில் தனியாக தயாரிப்பு நிறுவனம் எல்லாம் ஆரம்பித்து படங்களை தயாரித்தும் நடித்தும் வருகிறார்.

பசங்களை பாதிக்கும்: டி. இமான் சிவகார்த்திகேயன் மீது குற்றச்சாட்டை அடுக்கி உள்ள நிலையில், அது என்ன மாதிரியான துரோகம், இதுபற்றி நீங்க சிவகார்த்திகேயனிடம் நேரடியா பேசுனீங்களான்னு கேட்க, அதெல்லாம் பேச வேண்டிய அளவுக்கு பேசிவிட்டேன் என சண்டை போட்டதையே சொல்லி உள்ளார். மேலும், இது பற்றி விளக்கினால் பசங்க லைஃப் பாதிக்கும் என இமான் பேசியிருப்பது பல சந்தேகங்களை கிளப்பி உள்ளது.

பிஸ்மி பகீர்: இந்நிலையில், இதுதொடர்பாக அந்தணன் தனது கருத்தை தெரிவித்த நிலையில், தற்போது வலைப்பேச்சு பிஸ்மி "உடன்பிறந்த தம்பியாகவே நினைத்தவரின் குடும்பத்தில் பொறுக்கித்தனத்தை காட்டியதைவிட கேடுகெட்ட செயல் வேறு எதுவுமில்லை" என சிவகார்த்திகேயனை குறிப்பிடாமல் மறைமுகமாக இந்த பிரச்சனைக்கு உண்டான காரணம் இதுதான் என பதிவிட்டுள்ளார்.

இன்னும் இந்த பிரச்சனை குறித்து சிவகார்த்திகேயன் எந்தவொரு பதிலும் சொல்லாத நிலையில், ஏகப்பட்ட பேர் சிவகார்த்திகேயனுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமே அதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X