ரஜினி 171 வாட்ச் ரகசியம் என்ன? வலைப்பேச்சு பிஸ்மி சொன்ன சூப்பர் தகவல்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இதையடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு, அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில் படம் குறித்த முக்கிய தகவலை பிஸ்மி தெரிவித்துள்ளார்.

ரஜினியும் லோகேஷ் கனகராஜும் முதன் முறையாக கூட்டணி சேர்ந்துள்ளனர். இதனால் தலைவர் 171 படத்துக்கு மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் அனைத்து படமும் ஹிட்டாகி வருகிறது. இதுவரை விஜய், கமல் என பெரிய ஹீரோவை வைத்து இவர் எடுத்த படம் ஹிட்டடித்தன.

valaipechu Bismi interview about rajinikanth 171 movies details

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் மாஸ்டர்ஸ் ஆக்‌ஷன் கோரியோகிராபி செய்கின்றனர். இந்த படத்தில் ரஜினியுடன் பகத் பாசில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு, ரஜினி இந்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாக உள்ளது.

கடந்த வாரம் இப்படத்தின் போஸ்டர் வெளியானது, அந்த போஸ்டரில், ரஜினிகாந்த் ஸ்டைலாக இருக்கிறார். அவருக்கு பின்னால் டைம் மெஷின் இருப்பது போலவும் கையில் வாட்சை செயின் போல வைத்து இருப்பது போலவும் போஸ்டர் வடிவமைக்கப்பட்டு இருந்ததால், இந்த படம் டைம் டிராவல் கதையை கொண்ட படமாக இருக்கலாம் என்று, லோகேஷின் நீண்ட நாள் கனவான இரும்புக் கை மாயாவி படமாக இருக்கலாம் என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இதுகுறித்து பேசி உள்ள வலைப்பேச்சு பிஸ்மி இது, ரஜினி 171 படத்தின் போஸ்டர் வந்தாலும் வந்துச்சு, அவர் கையில் வாட்ச் இருந்ததால் டைம் டிராவல் கதை என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அது உண்மை இல்லை என்று சொல்லிவிட்டார். அவரின் முந்தைய படமான மாநகரம், கைதி திரைப்படம் போல இந்த படமும் ஒரே நாளில் நடக்கும் கதை என்பது தெரியவந்துள்ளது. வேட்டையன் படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் நிலையில் இந்த படத்திலும், ரஜினி ஓய்வு பெற்ற மிலிட்டரி அதிகாரியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது என்று வலைப்பேச்சு பிஸ்மி ரஜினி 171 படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

படத்தின் பெயர்: மேலும், இப்படத்திற்கு கழுகு எனப் பெயரிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், பான் இந்திய திரைப்படமாக இது உருவாகும் என்பதால், படத்தின் பெயரை ஆங்கிலத்தில் வைக்கவும் வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. 1981ம் ஆண்டு இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த கழுகு திரைப்படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இப்படத்தின் பணியை லோகேஷ் கனகராஜ் இரண்டு மாதத்திற்கு முன்பே தொடங்கிவிட்டதால், சோஷியல் மீடியாவில் இருந்து விலகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் அல்லது ஜூலை மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X