40 வருடமா ரஜினி தான் சூப்பர் ஸ்டார்..ஆனால், விஜய்யின் வளர்ச்சி அவருக்கு பிடிக்கல.. பிஸ்மி பேட்டி!

சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த வியாழக்கிழமை போயஸ் கார்டனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அரசியல் பற்றியும் சினிமா பற்றியும் பேசியதாக சீமான் கூறியிருக்கும் நிலையில், இந்த சந்திப்பின் பின்னணி குறித்து வலைப்பேச்சு பிஸ்மி பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதில், ரஜினிகாந்த் சீமான் சந்தித்தது நிச்சயமாக ஒரு அரசியல் ரீதியான சந்திப்பு தான். அதில் எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை. பல நேரத்தில் சீமான் அவர்கள் ரஜினிகாந்த் அரசியலை நன்கு கவனித்து வருகிறார் என்று கூறியிருக்கிறார். அந்த வகையில், அரசியல் குறித்து தான் பேசினோம் என்று சீமான் சொல்லி இருக்கிறார். இவர்களின் சந்திப்பு இரண்டரை மணி நேரத்திற்கு மேல் நடந்ததாக சொல்லப்படுகிறது.ரஜினி நான் அரசியலுக்கு வர மாட்டேன், அரசியலில் இருந்து விலகி விட்டேன், அரசியலுக்கு வந்திருந்தால் என் சொத்து அனைத்தும் போயிருக்கும், படங்கள் அனைத்தும் போயிருக்கும் என்று ரஜினி ஒரு பக்கம் சொன்னாலும், ரஜினிக்கு இன்னும் அந்த அரசியல் அரிப்பு இருக்கிறது. என்பது அவரின் செயல்பாடுகளை வைத்து நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

rajini seeman vijay bismi

ரஜினி அந்த இரண்டரை மணி நேரம் நிச்சயமாக அரசியல் குறித்துத்தான் பேசியிருப்பார். அந்த பேச்சும் கூட அவருடைய அரசியலாக தான் இருக்கும் என்பது என்னுடைய எண்ணம். இதுநாள் வரை ரஜினியை சங்கி என்று விமர்சனம் செய்து கொண்டு இருந்த சீமான்.அந்த சந்திப்பிற்கு பிறகு சங்கி என்ற வார்த்தைக்கு புது அர்த்தத்தையே கொடுத்திருக்கிறார். இதனால், ரஜினி, சீமான் மூலமாக தனது அரசியலை சாத்தியப்படுத்தலாம் என நினைத்து இருக்கலாம் என்பது என் எண்ணம்.

சீமானின் திட்டம்: தற்போது, விஜய் அரசியல் கட்சியை தொடங்கியிருப்பதால், அவரை வைத்துக் கொண்டு அரசியல் வண்டியை ஓட்டி விடலாம் என சீமான் நினைத்தார்.ஆனால் அதற்கும் வழி இல்லாமல் போய்விட்டதால், கடந்த சில நாட்களாக விஜயை சீமான் விமர்சனம் செய்து பேசி வருகிறார். இதனால் நிச்சயமாக சீமானுக்கு விஜய் ரசிகர்களின் ஆதரவு இருக்காது என்பதை தெரிந்து கொண்ட சீமான், வாக்குகளை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அண்மையில் சிவகார்த்திகேயனை சந்தித்து பேசினார். இப்போது, ரஜினியை சந்தித்து பேசி உள்ளார். நடிகர்களுடன் நட்பாக இருக்கும் போது அவர்களின் ரசிகர்களின் வாக்குகளை பெற்றுவிடலாம் என்பது சீமானின் கணக்கு, இந்த அடிப்படையில் தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

தொழில் ரீதியான போட்டி: அதே நேரம் ரஜினிக்கு ஆன்மீக அரசியல் என்ற பெயரில் இந்துத்துவா அரசியலை தமிழ் நாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அந்த ஆசையை மற்ற கட்சிகளோடு இணைந்து சாத்தியப்படுத்த முடியாது. இதற்கு சீமான் உடன்படுவார் என்பதால், சீமானை வைத்து தன்னுடைய ஆன்மீக அரசியலை, தமிழ் நாட்டில் கொண்டு வரும் முயற்சியாக கூட இது இருக்கலாம். ஆனால், இது விஜய்க்கு எதிரான அரசியல் சந்திப்பு இல்லை. ரஜினிக்கும் விஜய்க்கும் நேரடியான மோதல் எதுவும் இல்லை. தொழில் ரீதியான போட்டி மட்டும் தான் இருக்கிறது. ஒரு காலகட்டத்தில்,கமல்ஹாசன் அவர்கள் ரஜினிக்கு போட்டியாக இருந்தார், இப்போது, விஜய் உச்சத்தில் இருக்கிறார், அவருக்கு கீழ் தான் ரஜினி இருக்கிறார். 40 வருடத்திற்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக இருந்த நம்மை, விஜய் தாட்டிக்கொண்டு போய் விட்டாரே என்கிற ஒரு தொழில் ரீதியான போட்டி தான் அது என வலைப்பேச்சு பிஸ்மி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X