தளபதி 69 படப்பிடிப்பு.. தயாரிப்பாளர்கள் வைத்த செக்: தனுஷை வைத்து எஸ்கேப் ஆன விஜய்!

சென்னை தயாரிப்பாளர் சங்கம் எந்த புது படத்திற்கும் பூஜை போடக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றி இருக்கும் நிலையில், நேற்று விஜய்யின் தளபதி 69 படத்திற்கு பூஜை போடப்பட்டது. குறித்து சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி பேட்டி அளித்துள்ளார்.

அஜித் நடித்த துணிவு படத்தை இயக்கிய எச்.வினோத் தளபதி 69 படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில், பாபி தியோல், பூஜா ஹேக்டே, மமிதா பைஜூ, கெளதம் வாசுதேவ் மேனன், ப்ரியாமணி உள்ளிட்டோர் கமிட்டாகி உள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். நேற்று படத்திற்கு பூஜை போடப்பட்ட நிலையில்,போட்டோ இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது.

vijay thalapathy 69 bismi 69

தளபதி 69: இதுகுறித்து பேசி உள்ள வலைப்பேச்சு பிஸ்மி, தளபதி 69 படத்திற்கு நேற்று பூஜை போடப்பட்டது. அந்த பூஜையில் பூஜா ஹெக்டே,விஜய், எச் வினோத் என சிலர் மட்டுமே கலந்து கொண்டார். இதையடுத்து, பனையூரில் செட் போடப்பட்டு இன்று படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதைத்தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு முடிந்ததும், தளபதி 69 திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்கம்: தயாரிப்பாளர் சங்கம் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் சம்பளத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. அதில், ஆகஸ்ட் 16ந் தேதிக்கு பின், எந்த புது படத்தையும் ஆரம்பிக்கக்கூடாது என்றும் அக்டோபர் 30ந் தேதிக்குள் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என தயாரிப்பாளர் சங்கர் அறிவித்து இருந்தது. ஒரு ஸ்டிரைக்கை அறிவித்துவிட்டு, அனைத்தையும் முறைப்படுத்த வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் திட்டம் போட்டு இருந்தது. ஆனால், இதை செயல்படுத்த முடியவில்லை.

எஸ்கேப்பான விஜய்: சமீபத்தில் தனுஷ் இட்லி கடை என்ற படத்தின் படப்பிடிப்பை கடந்த மாதம் தொடங்கினார். தயாரிப்பாளர் சங்க தீர்மானத்தின் படி படப்பிடிப்பை தொடங்கி இருக்கக்கூடாது. ஆனால், தனுஷ், இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று டெஸ்ட் ஷூட்டிங்கை காட்டிவிட்டு படப்பிடிப்பை தொடங்கிவிட்டார்கள். அதே வேலையைத் தான் தற்போது தளபதி 69 படக்குழு செய்து, டெஸ்ட் ஷூட்டிங்கை காட்டி படப்பிடிப்பை நடத்துவார்கள். அதுமட்டுமில்லாமல் விஜய் படம் என்பதால், யாரும் இதற்கு எதிராக நிற்க மாட்டார்கள் என்றார். தனுஷை வைத்து விஜயும் இதில் எஸ்கேப்பாகி விட்டார்.

பாபி தியோல் வில்லன்: தொடர்ந்து பேசிய பிஸ்மி, தளபதி 69 படத்தில் பாபி தியோல் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தமிழ் சினிமாவில் எப்போதும் வில்லனுக்கு இருக்கும் தட்டுப்பாடை காட்டுகிறது. பாபி தியோல் பல படத்தில் நடித்து அந்த படம் எல்லாம் தோல்வித் திரைப்படமாகி பீல்ட் அவுட் ஆன ஒரு நடிகர். கடைசியில் இவர் அனிமல் படத்தில் வில்லனாக நடித்து தற்போது, பல படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

பான் இந்திய படம்: இவர் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்திலும் நடித்துள்ளார். அந்த படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிவிட்டால் தமிழ் ரசிகர்களுக்கு பாபி தியோல் பரீச்சீயமான முகமாகிவிடுவார் என்கிற அடிப்படையில் தளபதி 69 படத்தில் பாபி தியோலை வில்லனாக போட்டு இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் தளபதி 69 பான் இந்திய திரைப்படமாக இருப்பதால், அந்தந்த மாநில மக்களின் மனதில் இடம் பிடிக்க இது ஒரு யுக்தி என பிஸ்மி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X