ஆல் ஏரியாவுலையும் ஆப்பு ரெடி.. ஆடியோ லான்ச் ரத்தால் லியோ பட வசூலுக்கு பாதிப்பு.. பிஸ்மி பேச்சு!

சென்னை: விஜய்யின் லியோ படத்தின் ஆடியோ லான்ச் ரத்தான நிலையில் அதன் எதிரொலி லியோ படத்தின் பாக்ஸ் ஆபிஸிலும் நிச்சயம் தெரியும் என வலைப்பேச்சு பிஸ்மி சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தாக இதுதான் காரணம் என சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட காரணங்களை பலரும் அடுக்கி வருகின்றனர்.

Valaipechu Bismi opens up about Leo Audio Launch cancel will make impact on Box Office

ரத்தாக என்ன காரணம்: செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அதிகாரப்பூர்வமாக விஜய் ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் ஆடியோ லான்ச்க்கு வர விருப்பம் தெரிவித்தது தான் காரணம் எனக் கூறினாலும், அரசியல் அழுத்தம், சன் பிக்சர்ஸ் தரப்பு பிரச்சனை, ரஜினிகாந்த் ரசிகர்கள் பிரச்சனை , போலி டிக்கெட்டுகள் சிக்கல் என பல விஷயங்கள் பேசப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வலைப்பேச்சு பிஸ்மி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில். ஜெயிலர் படம் சூடு பிடித்தது அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகுதான் என்றும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாதது படத்தின் வசூலுக்கு மிகப்பெரிய பின்னடைவாக மற்ற ஏரியாக்களில் கண்டிப்பாக அமையும் என கூறியுள்ளார்.

ஆல் ஏரியாவிலும் ஆப்பு: ஏற்கனவே கர்நாடகாவில் காவிரி பிரச்சனை காரணமாக பந்த் நடைபெற்று வருகிறது. விஜயின் லியோ திரைப்படம் அங்கே ரிலீஸ் ஆவதில் சிக்கல் இருக்கும் என்கிறார். மேலும், மோகன்லால் ரசிகர்களுடன் விஜய் ரசிகர்கள் சமீபத்தில் போட்ட சண்டை காரணமாக கேரளாவிலும் லியோ படத்துக்கு லேசான எதிர்ப்பு கிளம்பியுள்ளது எனக் கூறியுள்ளார்.

ஆந்திராவில் லியோ கிப் போட்டியாக சில படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பலமுனை தாக்குதலை இந்த முறை நடிகர் விஜய் சந்திப்பார் என்பது உறுதியாகத் தெரிகிறது.

வசூல் பாதிக்கும்: ஆனால், எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டில் விஜய் ரசிகர்கள் லியோ படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக மாற்ற இது ஆடியோ லான்ச் ரத்து விவகாரம் கூடுதல் புரோமோஷன் ஆக மாறக்கூடும் என்றும் பிஸ்மி கருத்து தெரிவித்துள்ளார்.

Valaipechu Bismi opens up about Leo Audio Launch cancel will make impact on Box Office

சூப்பர் ஸ்டார் சர்ச்சை பிரச்சனை ஜெய்லர் படத்தின் வசூலை பெருக்கியது போல லியோ ஆடியோ லான்ச் பிரச்சனை தமிழ்நாடு மற்றும் ஓவர்சீஸில் லியோ படத்துக்கு மிகப்பெரிய அளவில் வசூலை கொண்டு வருவதற்கான வேலைகளை செய்யும் என எதிர்பார்க்கிறேன் என கூறுகிறார்.

என்ன செய்யப் போகிறார் விஜய்?: அக்டோபர் மாதம் வெளியாக உள்ள லியோ திரைப்படம் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் திட்டமிட்டபடி வெளியானாளே விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய தீபாவளியாக மாறிவிடும் என கூறியுள்ளார்.

ஆடியோ லான்ச் இல்லாத நிலையில் அதனை சரிக்கட்டும் விதமாக பெரிய அளவிலான புரமோஷன் யுக்திகளை லியோ தயாரிப்பு நிறுவனம் கையில் எடுத்தால் தான் பான் இந்தியா படமாக லியோ படம் வசூல் ஈட்டும் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X