தேசிய விருதுக்கு பின்னால் நடக்கும் பேரம்.. 'புஷ்பா'விற்கு விருது கொடுத்தது கேவலம்.. பிஸ்மி ஆதங்கம்!

சென்னை: தேசிய விருதுக்கு பின்னால் மிகப்பெரிய பேரம் நடக்கிறது என்று வலைப்பேச்சு பிஸ்மி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

ஜெய் பீம், கர்ணன், சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் நிச்சயம் தேசிய விருதை பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் 3 படங்களுக்கும் விருது கிடைக்காததால் தமிழ் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.

Valaipechu Bismi said that there is a huge deal going on behind the national award

ஜெய் பீம் படத்திற்கு எந்த விருதும் அறிவிக்கப்படாததால், ரசிகர்கள் பலர் தங்களது வருத்தங்களை பதிவு செய்து வருகின்றனர்.

பிஸ்மி பேட்டி: இதுகுறித்து பேட்டி அளித்துள்ள வலைப்பேச்சு பிஸ்மி, தேசிய விருது என்பது அரசு வழங்கும் விருது, இதில், தகுதிப்படைத்த படங்களுக்கும், தகுதிப்படைத்த கலைஞர்களுக்கும் தான் வழங்கப்படுகிறது என்று பாமரத்தனமாக நாம் நம்பிக்கொண்டு இருக்கிறோம். அந்த நம்பிக்கை நிறைவேறாமல் போகும் போதுதான், இந்த மாதிரியான ஏமாற்றங்கள் ஏற்படுகின்றன.

அரசியல் விருதுகள்: தேசிய விருதுகள் எந்த சூழலில் யாரால் கொடுக்கப்படுகிறது. இதற்கான படங்களையும், கலைஞர்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதையும் முதலில் நாம் தெரிந்து கொண்டால். இதுபோன்ற அதிர்ச்சிகள் ஏற்படாது. அரசு வழங்கும் விருதுகளை அரசியல் விருதுகள் என்று சொன்னால் மிகச் சரியானதாக இருக்கும்.

விருதின் லட்சணம் இதுதான்: இந்த முறை தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது வழங்கப்பட்டுள்ளது. இதைவைத்தே இந்த விருதின் லட்சணத்தை நாம் தெரிந்துக் கொள்ளலாம். தி காஷ்மீர் ஃபைல்ஸ் விருது கொடுக்கப்பட்ட பிறகு, அதே விருதை ஜெய் பீம், கர்ணன், சார்ப்பட்டா பரம்பரை படத்திற்கும் கொடுத்தார்கள் என்றால், அதைவிட அவமானம், மானக்கேடு வேறு எதுவுமே இல்லை.

Valaipechu Bismi said that there is a huge deal going on behind the national award

தேசிய விருதுக்கு பின்னால் நடக்கும் பேரம்: தேசிய விருது வழங்கும் குழுவின் ஜூரிகளை தேடி கண்டுபிடித்து, அவரை ஏதோ ஒரு வகையில் திருப்திப்படுத்தித்தான் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. தேசிய விருது கொடுப்பதற்கு பின்னால் ஒரு பெரிய பேரம் நடக்கிறது. தமிழில் இது போலத்தான் பல படங்களுக்கு விருதுகள் கிடைத்தன. இதனால், தேசிய விருதுக்கு பின்னால் பல அரசியல் இருப்பதால், இந்த படத்திற்கு கிடைக்க வில்லையே என கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

மிகவும் கேவலமானது: புஷ்பா படத்தில் நடித்த ஒரு நடிகருக்கு இந்த விருதை கொடுப்பதற்கு, இந்த அரசுக்கு எப்படி மனசு வந்தது. புஷ்பா படத்தின் கதை செம்மர கடத்தலை, மையமாக வைத்து உருவான கதை. அதில், அல்லு அர்ஜூன் கிரிமினலாக நடித்திருந்தார். அல்லு அர்ஜூன் சிறந்த நடிகராக இருக்கலாம். ஆனால், புஷ்பா படத்திற்கு விருதை கொடுத்தது என்பது மிகவும் கேவலமான விஷயம் என்று வலைப்பேச்சு பிஸ்மி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X