இதற்குக் கூட வரமாட்டாரா அஜித்? இதெல்லாம் ஒரு கொள்கையா? விளாசிய வலைப்பேச்சு பிஸ்மி!

சென்னை: இதற்குக் கூட வரமாட்டாரா அஜித், இதெல்லாம் ஒரு கொள்கையா? என வலைப்பேச்சு பிஸ்மி வீடியோவில் விளாசி உள்ளார்.

நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். விஜயகாந்தின் உடல், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் திரைபிரபலங்கள் அஞ்சலி செலுத்திய பிறகு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Valaipechu Bismi slams Ajith for not condoling Vijayakanths demise

தீவுத்திடலில் இருந்து மதியம் 2.30 மணியளவில் கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் மாலை 4.45 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்ட நிலையில், திரண்டு வந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே வாகனம் செல்ல முடியாமல் சிக்கி மெதுவாக ஊர்ந்து வந்தது.

அலை கடலென திரண்ட மக்கள்: சாலையின் இரண்டு புறமும் திரண்டு இருந்த மக்கள் ஒரு முறையாவது புரட்சி தலைவரின் முகத்தை பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்தில் வாகனத்தின் பின்னால் ஓடிவருவதை பார்க்க முடிந்தது. மேலும், 72 துப்பாகி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

நடிகர்கள் இரங்கல்: தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பல நடிகர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் அஜித் பிரேமலதா மற்றும் சுதீஷிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. மேலும் விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக துபாயில் இருப்பதால் நேரில் பங்கேற்க முடியவில்லை என்றும் நடிகர் அஜித் வேதனை தெரிவித்தாக கூறப்படுகிறது.படப்பிடிப்பு முடிந்த பிறகு சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் நடிகர் விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் வந்து பிரேமலதாவை சந்திக்க இருப்பதாக நம்பப்படுகிறது.

இதெல்லாம் ஒரு கொள்கையா: விஜயகாந்தின் மறைவுக்கு ஒட்டுமொத்த திரையுலகமே திரண்டு வந்து கதறிக்கொண்டு இருக்கும் போது அஜித் ஒரு இரங்கல் கூட தெரிவிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது என்றார் வலைப்பேச்சு பிஸ்மி. அஜித் சினிமாவிற்கு வந்த போது என்னென்ன பிரச்சனையில் சிக்கினார் அதற்கு நல்லாம் பஞ்சாயத்து செய்தவர் விஜயகாந்த் தான். சூர்யா, விஷால் எல்லாம் வெளிநாட்டில் இருப்பதால் வீடியோவில் இரங்கல் தெரிவித்து இருக்கார்கள். அப்படி கூட வீடியோ போட வேண்டாம் ஒரு நாலு வரியில் இரங்கல் தெரிவித்து இருக்கலாமே இதெல்லாம் ஒரு கொள்கையா? பைக் டூர் கம்பேனி தொடங்கியதாக அறிக்கை வெளியிட தெரிந்தவருக்கு விஜயகாந்திற்கு அறிக்கை வெளியிடத்தெரியாத என்று பிஸ்மி தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X