15 ஆயிரம் கோடி டார்கெட்.. விஜய்யின் மாஸ்டர் பிளான் எடுபடுமா?.. வெளுத்து வாங்கும் பிஸ்மி!

சென்னை: நடிகர் விஜய்யை ஆதரித்து பேசி வந்த வலைப்பேச்சு பிஸ்மி மற்றும் அந்தணன் திடீரென லியோ ரிலீஸுக்கு பிறகு கட்டம் கட்டி அடித்து வருகின்றனர்.

Valaipechu Bismi slams Vijay and his political carreer for earning money?

லியோ படத்தின் வெற்றி விழா போலவே அந்த நிகழ்ச்சி நடக்கவில்லை என்றும் நடிகர் விஜய்யின் அரசியல் ஆசையின் வெளிப்பாடாகவே அந்த நிகழ்ச்சி நடைபெற்றதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், ரஜினிகாந்தை மகிழ்விக்க விஜய் பேசினாலும், அவரையும் அறியாமல் அவரது சப்கான்சியஸ் மைண்ட்டில் இருக்கும் விஷயம் தான் காட்டுக்குள் காக்கா - கழுகு வரக் காரணம் என வெளுத்து வாங்கி உள்ளார்.

1500 கோடியை விட்டு விட்டு: நடிகர் விஜய் சினிமாவில் சம்பாதிக்கப் போகும் 1500 கோடியை தூக்கி எறிந்து விட்டு அரசியலுக்கு வருகிறார் என்றால் அவருடன் சேர்ந்து அரசியலுக்கு வரப்போகும் நபர்கள் யாரென்று பார்த்தால் யாருமே நல்லவர்கள் போல தெரியவில்லை என்றும் அரசியலுக்கு வந்து ஒரு 1500 கோடி சம்பாதிப்பதே விஜய்யின் டார்கெட்டாக கூட இருக்கலாம் என பிஸ்மி பதற வைத்துள்ளார்.

எந்த பிரச்சனைக்கும் வாய் திறக்கல: தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் நீட் உள்ளிட்ட எந்தவொரு சமூக பிரச்சனைக்கும் நடிகர் விஜய் இதுவரை வாயே திறக்கவில்லை. விழாவில் 2026 கேள்வியும் கப்பு முக்கியம் பிகிலு என சினிமா பாணியில் விஜய் கொடுத்த பதிலும் பக்காவாக செட்டப் செய்யப்பட்ட கேள்வி பதில் செக்‌ஷன் தான் என்றும் அடித்து நொறுக்கி உள்ளார்.

கண்டித்து இருக்கணும்: சமூக வலைதளங்களில் ஏன் கோபத்தை காட்டுறீங்கன்னு ரொம்ப சாஃப்ட்டா தனது ரசிகர்களை தடவிக் கொடுத்திருக்கிறார் நடிகர் விஜய். அதற்கு பதிலாக தனது ரசிகர்கள் ஆபாசமாக சோஷியல் மீடியாவில் கக்கும் வன்மத்தை ஒரு தலைவனாக கண்டித்து இருக்க வேண்டும். அதை செய்யவில்லை. விஜய் அறிவுரை வழங்கிய பின்னரும் அந்த வெற்றி விழாவுக்கு பிறகு விஜய் ரசிகர்கள் சைலன்ட்டாகி விட்டார்களா? என்ன? விஜய் காக்கா - கழுக்குன்னு சொல்லிட்டு கேப் விட்டு சிரித்தார் என்றும் ரத்னகுமார் எவ்ளோ பறந்தாலும் பசிச்சா இறங்கி வந்து தான் ஆகணும்னு பேசியதை தான் ஹைலைட் செய்து மீண்டும் ரஜினி ரசிகர்களுடன் மோதி வருகின்றனர்.

Valaipechu Bismi slams Vijay and his political carreer for earning money?

ஸ்ட்ரெயிட்டா சிஎம் சேர்: இவர்களை எல்லாம் வைத்துக் கொண்டு விஜய் ஸ்ட்ரெய்ட்டா சிஎம் நாற்காலியில் உட்காரும் கனவு கொண்டிருந்தால் அது வேடிக்கை தான். 2026ல் மட்டுமின்றி எப்போதும் விஜய்யின் கனவு நிறைவேறாது என சோலியை முடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X