தனுஷுடன் மோதல்.. சொன்னா கேட்கல.. காரணம் நயன்தாராதானா?.. நண்பர்களிடம் புலம்பும் விக்னேஷ் சிவன்?

சென்னை: விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து திருமணம் செய்துகொண்டு உயிர், உலக் என்ற இரண்டு மகன்களை வாடகை தாய் மூலம் பெற்றுக்கொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு பிஸியாக நடித்துவரும் நயன்தாராவும், LIK என்ற படத்தை இயக்கிவரும் விக்னேஷும் சமீப காலமாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிவருகிறார்கள். முக்கியமாக தனுஷுடன் அவர்களுக்கு ஏற்பட்ட மோதல் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தனுஷும், நயன்தாராவும் யாரடி நீ மோகினி படத்தில் இணைந்து நடித்தார்கள். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதற்கு பிறகு அவர்கள் இரண்டு பேரும் இணைந்து நடிக்காவிட்டாலும்; சிவகார்த்திகேயனை வைத்து தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் நட்புக்காக ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார் நயன். அந்தப் பாடலில் நடனம் ஆடியதற்காக சம்பளமே வாங்கவில்லை என்று தனுஷ் ஒரு பேட்டியில் பெருமையுடன் பேசியிருந்ததும் நினைவுகூரத்தக்கது.

nayanthara vignesh shivan dhanush

மோதல்: இதற்கிடையே நயனும், விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். சூழல் இப்படி இருக்க சமீபத்தில் தனுஷுக்கும், நயனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதாவது நயன்தாரா பற்றிய ஆவணப் படத்தில் நானும் ரௌடிதான் பட ஃபுட்டேஜை பயன்படுத்த தனுஷிடம் அனுமதி கோரப்பட்டது. அதற்கு தனுஷ் மறுத்துவிட்டார். இருந்தாலும் ஆவணப் படத்தின் ட்ரெய்லரில் மூன்று நொடிகள் அந்தப் படத்தின் ஃபுட்டேஜ் இருந்தது. அதன் காரணமாக வக்கீல் நோட்டீஸை அனுப்பினார் தனுஷ்.

காட்டமான கடிதம்: 10 கோடி ரூபாய் கேட்டு வக்கீல் நோட்டீஸை தனுஷ் அனுப்பியதைத் தொடர்ந்து கொந்தளித்த நயன்; காட்டமாக ஒரு கடிதத்தை எழுதினார். அதில் தனுஷை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஆவணப் படத்தில் 37 நொடிகள்வரை நானும் ரௌடிதான் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதன் காரணமாக நீதிமன்றத்தில் தனுஷ் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இப்படி தனுஷுக்கும் நயனுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் மோதல் கோலிவுட்டில் பேசுபொருளாகியிருக்கிறது.

nayanthara vignesh shivan dhanush

நயனின் பேட்டி: தனுஷுடனான மோதல் ஏற்படுத்திய சர்ச்சை ஒருபக்கம் இருக்க சமீபத்தில் ஆங்கில தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார் நயன்தாரா. அப்போது வலைப்பேச்சு குழுவினரை குரங்குகள் என்று கூறினார். அவரது இந்தப் பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தார்கள். வலைப்பேச்சு டீமும் தரமான பதிலடியை கொடுத்துவருகிறது. சூழலி இப்படி இருக்க பத்திரிகையாளர் பிஸ்மி நயன் மற்றும் விக்னேஷ் சிவன் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார்.

பிஸ்மி பேட்டி: அவர் அளித்த பேட்டி ஒன்றில், "விக்னேஷ் சிவனால் நயன்தாரா கெட்டாரா இல்லை நயன்தாராவால் விக்னேஷ் சிவன் கெட்டாரா என்பது தெரியவில்லை. ஆனால் நாங்கள் விசாரித்ததுவரை ஒரு தகவல் வருகிறது. அதாவது,தனுஷுடன் ஏற்பட்ட மோதலுக்கு நயன்தாராதான் முழுக்க முழுக்க காரணம். நான் சொல்லியதை அவங்க கேட்கவே இல்லை. பொறுமையாக இருக்குமாறு சொன்னாலும் கேட்கவில்லை என்று தனது நண்பர்களிடம் புலம்பி தள்ளுகிறாராம் விக்னேஷ். அதேசமயம் நயனின் கடிதத்தில் இருந்த வார்த்தைகளை வைத்து பார்க்கையில் இது முழுக்க முழுக்க விக்னேஷ் சிவனின் வேலையாக இருக்குமோ என்கிற சந்தேகமும் உள்ளது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X