அரசியலுக்காக விஜய் போடும் இரட்டை வேடம்...என்ன இந்த பிரபலம் இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: அரசியலுக்காக விஜய் இரட்டை வேடம் போடுகிறார் என்று பிரபலம் ஒருவர் பேட்டியில் கூறியுள்ளார்
நடிகர் விஜய் நேற்று 234 தொகுதியிலும் 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடத்தை மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.
இந்த விழாவில் விஜய் பேசியது குறித்து பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

வரவேற்கிறேன்: அந்த வகையில் சினிமா விமர்சகரான வலைபேச்சு பிஸ்மி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், அம்பேத்கர், காமராஜர், பெரியார் போன்ற தலைவர்களை பற்ற படியுங்கள் என்று கூறியது. இந்த தலைமுறை மாணவர்களுக்கு தேவையான ஒன்றுதான். தலைவர்களை பற்றி படியுங்கள் என்று விஜய் போன்று பிரபலமானவர்களே கூறி இருப்பதால் அம்பேத்கர், காமராஜர் பற்றி தெரியாதவர்கள் அவர்களை பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள் அவரின் இந்த பேச்சை நான் வரவேற்கிறேன் பாராட்டுகிறேன்
ஏன் கண்டிக்கவில்லை: அதே போல ஓட்டுக்கு பணம் வாங்காதீங்க என்று சொல்லும் விஜய், தனது படம் வெளியாகும் போது ஒரு டிக்கெட்டின் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதை இதுவரை என் தடுக்கவில்லை, கண்டிக்கவில்லை. நீங்கள் படத்தை வெளியிட்டு மக்களிடம் பணம் கொள்ளையடிக்கும் போது, ஓட்டுக்கு மக்கள் பணம் வாங்குவது மட்டும் தவறா என்ற கேள்வி என் மனதில் எழுகிறது.

விஜய்யின் யுக்தி: விஜய் இன்று தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு உதவி கொடுப்பது என்பது ஒரு கண்துடைப்பு நடவடிக்கை தான். விஜய் அரசியலுக்கு வருவதற்கான நகர்வு தற்போது வேகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 2024ம் ஆண்டு தேர்தலுக்கு என்று புதிய வாக்காளர்கள் இருப்பார்கள் அவர்களை கவர்ந்து, அவர்களை தன் பக்கம் திருப்புவதற்கான யுக்தி தான் இது.
அவ்வளவுதான் அவர் அக்கறை: அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மக்கள் மீது அக்கறை வருவதே தேர்தல் நேரத்தில் தான். அதே போந்த படம் வசூலை அள்ளும் அதன் பிறகு மக்களை கண்டுகொள்ளமாட்டார் அவ்வளவு தான் அவருடைய அக்கறை என்று விஜய்யின் அரசியல் வருகை குறித்து விமர்சித்து பேசி இருக்கிறார் வலைப்பேச்சு பிஸ்மி.


Click it and Unblock the Notifications











