யோகி பாபு குழந்தை மீது சத்தியம் பண்ணனும்.. அவர் ஒரு குப்பை.. கொந்தளித்த வலைப்பேச்சு டீம்.. ஏன்?
சென்னை: சினிமா செய்திகளை சொல்வது போல பொய்களையே சிலர் க்ரூப்பாக அமர்ந்துக் கொண்டு பேசி வருவதாக யோகி பாபு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். மேலும், அந்த பேட்டியில், அவர்கள் தன்னிடமே காசு கேட்டதாகவும் கூட இருந்த நடிகர் ஒருவரிடமும் அவர்கள் காசு வாங்கிருக்காங்க என்று பேசியிருந்தார்.
வலைப்பேச்சு யூடியூப் சேனலில் பேசி வரும் அந்தணன், பிஸ்மி மற்றும் சக்திவேலை தான் யோகி பாபு சொல்கிறார் என சோஷியல் மீடியா முழுவதும் நேற்று போஸ்ட்டுகள் தீயாக பரவின.

இந்நிலையில், யோகி பாபுவுக்கு நேரடி சவால் விடும் வகையில் ஒரு முழு வீடியோவையே வெளியிட்டு யோகி பாபு ஒரு குப்பை என்றும் அவருடைய குழந்தை மீது சத்தியம் செய்வாரா? என்றும் கேட்டு அதிர்ச்சியை கிளப்பியுள்ளனர்.
சினிமா பிரபலங்கள் பற்றி: வலைப்பேச்சு யூடியூப் சேனலில் சினிமா பிரபலங்கள் பற்றியும் புதிய படங்களின் அப்டேட்கள் உள்ளிட்டவற்றையும், கிசுகிசுக்களையும் தினமும் வீடியோக்களாக போட்டு சொல்லி வருகின்றனர். மூத்த பத்திரிகையாளர்களான இவர்கள் மீது பாசிட்டிவ் விமர்சனங்களும், நெகட்டிவ் விமர்சனங்களும் அவ்வப்போது எழுந்தாலும், பெரிதாக யாரும் இவர்களை தாக்காத நிலையில், தொடர்ந்து செய்திகளை கூறி வருகின்றனர். இந்நிலையில், யோகி பாபு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இவர்களை மறைமுகமாக தாக்கும் விதத்தில் பேசியதும் அப்செட்டான வலைப்பேச்சு டீம் தற்போது வீடியோ ஒன்றை போட்டு யோகி பாபுவை தாக்கி பேசியுள்ளனர்.
திருத்தணி கோயிலில் சத்தியம் பண்ண வாங்க: யோகி பாபு மிகப்பெரிய முருக பக்தர் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். யோகி பாபுவிடம் நாங்க காசு வாங்கியிருந்தா அவர் திருத்தணி கோயிலில் வந்து சத்தியம் செய்ய வேண்டும் என்றும் அவருடைய குழந்தையை கூட்டி வந்து குழந்தை மீது சத்தியம் செய்ய வேண்டும், நாங்க எங்க குழந்தைகளை கூட்டி வந்து சத்தியம் செய்கிறோம் எனக் கூறியுள்ளனர். திருத்தணி கோயிலில் இல்லை என்றாலும் வடபழனி முருகன் கோயில் உள்ளிட்ட எந்தவொரு முருகன் கோயிலிலும் சத்தியம் செய்ய நாங்க தயார் எனக் கூறியுள்ளனர்.
நீங்க ஒரு குப்பை: கோபுரத்தின் மீது ஒரு குப்பை ஒட்டிக் கொண்டது போலத்தான் சினிமாவில் யோகி பாபு உள்ளார். அவரது காமெடி எதுவுமே மக்களை சிரிக்க வைப்பது கிடையாது. அவர் நல்ல காமெடியனோ அல்லது நடிகனோ கிடையாது. அவர் ஒரு குப்பை, சீக்கிரமே கீழே விழுந்து விடுவார் என பிஸ்மி சாபம் விடுவது போல கொந்தளித்து பேசியுள்ளார்.
தயாரிப்பாளர்களின் சாபம்: ஒரு நாளைக்கு 25 லட்சம் சம்பளமாக வாங்குகிறார் யோகி பாபு என்றும் பல தயாரிப்பாளர்களின் சாபத்தில் தான் நீங்க சம்பாதிக்கிறீங்க, உங்க நடிப்பில் வெளியாகும் படங்கள் எதுவும் ஓடுவதில்லை என்றும் மூவரும் இணைந்து கொண்டு யோகி பாபுவுக்கு எதிராக பேசியுள்ளனர். சினிமா வட்டாரத்தில் இது மிகப்பெரிய அதிர்வலையை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் யோகி பாபுவின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. நடிகர் அஜித் குறித்து யோகி பாபு சொன்ன அந்தவொரு விஷயத்தையும் வலைப்பேச்சு டீம் தற்போது கூட்டத்தில் கட்டுச் சோத்தை அவிழ்ப்பது போல அவிழ்த்து விட்டுள்ளான்ர். இந்த பஞ்சாயத்து எங்கே போய் முடியப் போகுதோ!


Click it and Unblock the Notifications











