விஜய் பட நடிகையின் கவர்ச்சி புகைப்படம்.. சிக்கிய வலைப்பேச்சு பிஸ்மி, அந்தணன்.. கடும் விமர்சனம்!
சென்னை: பிரேமலு படத்தின் மூலம் சென்ஷேனல் ஹீரோயினாக மாறியுள்ள 23 வயது நடிகையின் புகைப்படத்தை ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டதால் வலைப்பேச்சு யூடியூப் சேனல் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. ஏற்கனவே ஆதாரமற்ற சினிமா தகவல்களை பரப்பியதற்காக நயன்தாரா இவர்களை குரங்குடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். இந்த கவர்ச்சி புகைப்படம் பூதாகரமாக வெடித்திருக்கிறது.
மலையாளத்தில் வெளியான சூப்பர் சரண்யா படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த அனஸ்வரா ராஜனை விட மமிதா பைஜூவை ரசிகர்கள் அதிகம் கொண்டாடினர். பின்னர், கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமலு படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்களை கவனம் ஈர்த்தார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு மொழிகளில் அவருக்கான பட வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கின. அவர் தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ரிபெல் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து விஜயின கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்தபடியாக விஷ்ணு விஷால் நடிக்கும் இரண்டு வானம் படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து பல புதிய படங்களில் மமிதா பைஜூ நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதனோடு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கும் படத்தில் மமிதா பைஜூ நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், டிராகன் படத்தின் புரோமோஷன் நிகழ்வில் பிரதீப் ரங்கநாதன் இதுகுறித்து மறைமுகமாக உறுதிப்படுத்தும் வகையில் பதிலளித்திருந்தார்.
சென்சேஷனல் ஹீரோயின்: விஜய், விஷ்ணு விஷால், பிரதீப் ரங்கநாதன், தனுஷ், சூர்யா ஆகியோரின் படங்களில் மமிதா பைஜூ ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். தமிழ் சினிமாவின் சென்ஷேசனல் ஹீரோயினாக மாறியுள்ள மமிதா பைஜூ தற்போது பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் நடிக்கும் முதல் படத்திற்கு ஜோடியாக நடிக்க இருக்கிறாராம். கோலிவுட்டில் ஷங்கரின் மகன் ஹீரோவாக அறிமுகம் குறித்த செய்திகள் ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது. ஏற்கனவே இவரது மகள் அதிதி ஷங்கர் தமிழ், தெலுங்கு படங்களில் ஹீரோயினாக அசத்தி வருகிறார். அவரை தொடர்ந்து அர்ஜித் ஹீரோவாக அறிமுகம் ஆகும் முதல் படத்திலேயே சென்ஷேனல் நாயகி ஹீரோயினாக நடிப்பது தான். கிட்டத்தட்ட மமிதா பைஜூ தான் ஹீரோயின் என உறுதிப்படுத்திவிட்ட நிலையில், இன்னும் சில நாட்களில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவர்ச்சி புகைப்படம்: இ்ந்நிலையில், சினிமா குறித்த அப்டேட்களை அளித்து வரும் வலைப்பேச்சு யூடியூப் சேனலில் ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட மமிதா பைஜூவின் கவர்ச்சி புகைப்படம் பெரும் சர்ச்சையாகியுள்ளது, பிஸ்மி, அந்தணன் மற்றும் சக்தி ஆகியோர் ஷங்கரின் மகன் ஹீரோவாக அறிமுகம் ஆவது குறித்த செய்தியின் நடுவே மமிதா பைஜூவின் கவர்ச்சி புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இதை பார்த்தால் ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இதை பார்த்த சிலர் பிஸ்மி, அந்தணனை கடுமையாக தி்டடி வருகின்றனர். மேலும் இதுதான் மஞ்சள் பத்திரிகை என பேசியுள்ளனர்.
முன்னதாக ஆதாரமற்ற சினிமா தகவல்களை தருவதாகக் கூறி நயன்தாரா இவர்களை 3 குரங்குகள் என விமர்சித்திருந்தார். அதைத்தொடர்ந்து அஜித்தை பற்றி பேசி பெரிய சர்ச்சைக்குள் பிஸ்மி, அந்தணன் சிக்கினர். தற்போது மமிதா பைஜூவின் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு சிக்கியிருப்பதால் சென்ஷேசனள் ஹீரோயின் இதற்கு நடவடிக்கை எடுப்பார் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











