twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Flashback.. "லதாம்மா"வுக்காக.. ஈஸியாக போட்ட வார்த்தைகள்.. "வளையோசை கல கல"!

    |

    சென்னை : சத்யா திரைப்படத்தில் இடம் பெற்ற வளையோசை கல கல ... இந்த பாடலை பல முறை நாம் ரசித்து கேட்டு இருப்போம்.. இப்பாடலில் உள்ள சுவாரஸ்யம் பற்றி பிளாஷ் பேக் பகுதியில் பார்க்கலாம்.

    1988ம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தான் சத்யா.

    துவைச்ச துணியையே துவைப்போம்துவைச்ச துணியையே துவைப்போம்

    இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், அமலா, வடிவுகரசி, நாசர், கிட்டி ஆகியோர் நடித்திருந்தனர்.

    சூப்பர் ஹிட் மூவி

    சூப்பர் ஹிட் மூவி

    ரொமான்டிக் ஹீரோவாக இருந்த கமல்ஹாசன் இந்த திரைப்படத்தில் ஆக்ஷனில் புகுந்து விளையாடி இருப்பார். இந்த திரைப்படம் காரம் சாரமாக மசாலா மணத்துடன் இருந்ததால் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதிக நாட்கள் தியேட்டரில் ஓடிய என்ற பெருமைய பெற்றது.

    கவிஞர் வாலி

    கவிஞர் வாலி

    இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற வளையோசை கல கல பாடலை கவிஞர் வாலி எழுதி இருந்தார். லதா மங்கேஷ்கர், எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடி இருந்தனர். இப்பாடலுக்கு இசையானி இசையராஜ இசையமைத்து இருந்தார்.

    அழகான வார்த்தை நயம்

    அழகான வார்த்தை நயம்

    கவிஞர் வாலி அவர்கள் இப்பாடலில் ஒரு காதலி தன் காதலனை ஒருநாள் பார்க்கவில்லை என்றால் ஒருவாரம் பார்க்காதது போல இருக்கும் என காதலினி பிரிவை வார்த்தை நயத்தால் அழகுப்படுத்தி, உன்னை காணாது உருகும் நொடி நேரம்... பல மாதம் வருடம் என மாறும் என காதலின் துயரை மிகைப்படுத்தி நறுக்கென்று கூறி இருப்பார்.

    கல...கல...

    கல...கல...

    இந்த பாடல் எப்படி உருவானது என்பது குறித்து இளையராஜா ஒரு சுவாரஸ்யமான தகவலை கூறியிருந்தார். இப்படி ஒரு டியூன் இருக்கு, இந்த பாடலை லதா மங்கேஷ்கர் பாடுறாங்க, அவங்களுக்கு தமிழ் வாராது இதனால், வந்த வார்த்தையே திரும்ப திரும்ப வரமாதிரி பாட்டு எழுதுங்க என்று வாலியிடம் கூறினேன். அதாவது இரட்டைக்கிழவி கல கல...குளு குளு... சில சிலுனு சொன்னேன், உடனே இந்தா பாட்டுனு கொண்டுவந்து கொடுத்தார் வாலி. அப்படி உருவானது தான் இந்த வளையோசை கல கல என்று பெருமையாக கூறினார்.

    ரீங்காரமிடம்

    ரீங்காரமிடம்

    சத்யா திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கு மேலாகிறது இருந்தாலும் இந்த பாடல் இன்னும் நம் காதுகளில் ரீங்காரமிடுகிறது என்றால் அதற்கு காரணம் வாலி, இளைஞராஜா என்ற இரண்டு ஜாம்பவான்களின் இசையின் மீதான காதலே. இன்றும் என்றும் ரொமான்டிக் பாடல்கள் வரியில் இந்த பாடல் இருக்கும். அதிலும் அமலா, கமல்ஹாசனின் காதல் லீலைகள் இந்தப் பாட்டுக்கு சற்றே தூக்கலாக அமைந்தது என்றாலும் சந்தேகம் இல்லை.. செம பாட்டு!

    English summary
    Valaiyosai kala kala song flashback
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X