காதலாகி கசிந்துருகி... அமெரிக்காவில் காதலர் தின கவியரங்கம்
வாஷிங்டன் : தமெரிக்கா டிவியில் காதலர் தினத்தை முன்னிட்டு காதல் ரசம் சொட்ட சொட்ட சிறப்பு கவியரங்கம் நடத்தப்பட உள்ளது.

காதலாகி கசிந்துருகி என்ற தலைப்பில் காதலர் தின சிறப்பு கவியரங்கம் பிப்ரவரி 15 ம் தேதியன்று நடைபெற உள்ளது. மகேந்திரன் பெரியசாமி தலைமையில் இணைய வழியில் இந்த கவியரங்கம் நடத்தப்பட உள்ளது.
நியூயார்க் நேரப்படி பிப்ரவரி 15 ம் தேதி இரவு 8 மணிக்கும், இந்திய நேரப்படி பிப்ரவரி 16 ம் தேதி காலை 6.30 மணிக்கும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
உலகார்ந்த கவிஞர்கள் படைத்தளிக்கும் கவிதைகளுடன் நடக்க உள்ள இந்நிகழ்ச்சி தமெரிக்கா டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் கவிதைகளை படைக்க விரும்புவோர் தங்களின் வருகையை உறுதிப்படுத்தும் படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











