காதலர் தினத்துக்கு காத்திருக்கு பிரம்மாண்ட சர்ப்ரைஸ்.. பிரபாஸின் ராதே ஷ்யாம் ப்ரீ-டீசர் ரிலீஸ்!
சென்னை: நடிகர் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி உள்ள ராதே ஷ்யாம் படத்தின் டீசர் வரும் காதலர் தினத்தன்று வெளியாகிறது.
அதனை முன்னிட்டு தற்போது ஒரு ரொமான்டிக்கான ப்ரீ-டீசரை படக்குழு வெளியிட்டு டிரெண்டாக்கி வருகிறது.
பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸின் மார்க்கெட் உலகளவில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டார்லிங் பிரபாஸ்
பாகுபலி, சாஹோ, சலார், ஆதிபுருஷ் என ஒரு பக்கம் ஆக்ஷன் ஹீரோவாக எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகளில் நடித்து வரும் நடிகர் பிரபாஸை அப்படியே பழைய டார்லிங் பிரபாஸாக கொடுக்கும் முயற்சியாக இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் ராதே ஷ்யாம் படத்தை இயக்கி உள்ளார்.

பொம்மா
அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரமுலோ படத்தில் புட்ட பொம்மா பாடலுக்கு அப்படியொரு ஆட்டம் போட்ட நடிகை பூஜா ஹெக்டே இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் உடன் ரொமான்ஸ் செய்கிறார். பிரபாஸ் இருப்பதால், பிரம்மாண்ட காதல் காவியமாக இந்த படத்தை இயக்குநர் உருவாக்கி உள்ளார்.

காதலர் தினத்துக்கு
வரும் காதலர் தினத்தன்று ராதே ஷ்யாம் படத்தின் டீசரை படக்குழு வெளியிட முடிவு செய்துள்ளது. இந்த படத்தில் விக்ரமாதித்யா கதாபாத்திரத்தில் பிரபாஸும் பிரேமா எனும் கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டேவும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் வியாபார பணிகளை தொடங்கி உள்ளது.

ப்ரீ-டீசர்
காதலர் தினத்தை முன்னிட்டு ராதே ஷ்யாம் டீசர் வெளியாகவுள்ள நிலையில், தற்போது அதனை அறிவிக்கும் விதமாக நடிகர் பிரபாஸ் செம ரொமான்டிக் பாயாக நடந்து வரும் அட்டகாசமான ப்ரீ-டீசரை தற்போது படக்குழு வெளியிட்டு டிரெண்டாக்கி வருகிறது. காதலர் தினத்தன்று ஒட்டுமொத்த சமூக வலைதளமும் பிரபாஸ் ரசிகர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











