காதலர் தின ஸ்பெஷல்.. பிப்ரவரி 14ந் தேதி வெளியாக உள்ள படங்களின் லிஸ்ட்!
சென்னை: ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த விடா முயற்சி திரைப்படம் கடந்த 6ந்ந் தேதி தியேட்டரில் வெளியானது. இத்திரைப்படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கி உள்ளார். இப்படம் மக்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் மாஸ் காட்டி வரும் நிலையில், இந்த வாரம் காதலர் தினத்தை முன்னிட்டு ஏராளமான திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாக உள்ளது. அது என்னேன்ன படம் என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஃபயர்: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான ரச்சித்தா மகாலட்சுமி நடிப்பில் ஜே எஸ் கே சதீஷ் இயக்கத்தில் உருவான ஃபயர் படத்தில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும், சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சிங்கம்புலி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து, மெதுமெதுவாய் பாடல் வெளியாகி படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த, ரச்சித்தா மகாலட்சுமி, பாலாஜியுடன் படுக்கை அறை காட்சியில் படு நெருக்கமாக நடித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 14ந் தேதி வெளியாக உள்ளது.

2கே லவ் ஸ்டோரி: சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள 2கே லவ் ஸ்டோரி ஜெகவீர நாயகனாக அறிமுகமாகி உள்ளார். இதில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். மேலும், பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயப்பிரகாஷ், வினோதினி என பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. புகைப்படம் எடுக்கும் ஒரு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
தினசரி: ரோஜா கூட்டம்,பார்த்திபன் கனவு, போஸ், நண்பன் போன்ற ஹிட் திரைப்படத்தில் நடித்த நடிகர் ஸ்ரீகாந்த் தினசரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார். இதில், ஹீரோயினாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சிந்தியா லூர்ட்தே நடித்துள்ளார். இந்த படத்திலிருந்து, தேடி தேடி நான் கண்டேன் என்ற பாடல் கடந்த மாதம் வெளியாகி சோஷியல் மீடியாவில் டிரெண்டானது. அந்த பாடலைப்பார்த்த இணையவாசிகள், ரோஜா கூட்டம், பார்த்திபன் கனவு என போன்ற ஹிட் படத்தில் நடித்த ஸ்ரீகாந்திற்காக இந்த நிலை என்று கடுமையாக அவரை ட்ரோல் செய்தனர். இதற்கு ஸ்ரீகாந்த் சரியான பதிலடி கொடுத்திருந்தார். இந்த படம் காதல் தினமான 14ந் தேதி வெளியாக உள்ளது.
கண்நீரா: மலேசியா வாழ் தமிழரான கதிரவென் இயக்கி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் கண்நீரா. இப்படத்தில் நயாகியாக சாந்தினி கவுர், மாயா கிளம்மி, நந்தகுமார் NKR ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு கண்நீரா என வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கண்நீரா என்பது கண்ணுக்குள் இருக்கிற நீர் என்று பொருள். காதல் என்றாலே கண்ணீருக்கு பஞ்சமிருக்காது, அதோடு படத்தில் கதாநாயகியின் பெயர் நீரா என்பதால் இரண்டையும் இணைத்து விதமாக படத்திறகு" கண்நீரா " என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஒத்த ஓட்டு முத்தையா: கவுண்டமணி கதையின் நாயகனாக நடித்துள்ள படம் 'ஒத்த ஓட்டு முத்தையா. இப்படத்தில், யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து, மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக், நாகேஷின் பேரன் கஜேஷ், மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கவுண்டமணி கலகலப்பாக பேசி தனது ரசிகர்களை மகிழ்வித்து இருந்தார். இப்படம் 14ந் தேதி திரையில் வெளியாக உள்ளது.
காதல் என்பது பொதுவுடமை: தன் பாலின ஈர்ப்பாளர்களின் உணர்வுகளையும் காதலையும் மையப்படுத்தி உருவாகி இருக்கும் திரைப்படம் காதல் என்பது பொதுவுடமையாகும். இத்திரைப்படத்தில், லிஜோமோல் ஜோஸ், வினித், ரோகினி ஆகியோர் நடித்துள்ளனர். பல வருடத்திற்கு பிறகு வினித் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் 14ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











