மேகத்தை காகிதமாக்கி காதல் கடிதம் தீட்ட ரெடியா குணால் ஃபேன்ஸ்.. ரீ ரிலீஸுக்கு ரெடியான ‘காதலர் தினம்’!
சென்னை: ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் அளப்பரிய அன்பை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. காதலர்கள் தங்கள் மனதில் இருப்பவர்களுக்கு மலர், பரிசு பொருட்களை கொடுத்து காதலை வெளிப்படுத்துவார்கள். அந்த காதல் ஜோடிகளை கவரும் வகையில் விதவிதமான தள்ளுபடிகள், சலுகைகளை பல வணிக நிறுவனங்கள் அறிவித்து உள்ளன. அந்த வகையில் காதலர்கள் தங்களது காதலை கொண்டாட 'காதலர் தினம்' திரைப்படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.
அண்மைக்காலமாக பழைய திரைப்படங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மீண்டும் ரீ ரிலீசாகி வருகின்றன. அந்த வகையில் ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி படையப்பா திரைப்படம் வெளியானது. கமலஹாசனின் ஆளவந்தான், வேட்டையாடு விளையாடு, விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன், விஜய் நடித்த கில்லி, அஜித்தின் மங்காத்தா, சிம்புவின் சிலம்பாட்டம் போன்ற திரைப்படங்கள் ரீ ரிலீஸ் ஆகி வசூலை அள்ளியது. அதைத்தொடர்ந்து காதலர் தினத்தை முன்னிட்டு சூர்யாவின் 'மௌனம் பேசியதே', மாதவனின் மின்னலே திரைப்படங்கள் பிப்ரவரி 13ந் தேதி ரீ ரிலீஸாக உள்ளது.

காதலர் தினம்: அந்த வரிசையில் தற்போது 'காதலர் தினம்' திரைப்படம் பிப்ரவரி 14ந் தேதி ரீ ரிலீஸ் ஆக உள்ளது. 1999 ஆம் ஆண்டு இயக்குனர் கதிர் இயக்கத்தில் குணால், சோனாலி பிந்த்ரே, நாசர் நடித்த இந்த படம் வெளியாக உள்ளது. காதலை சொல்ல எத்தனை திரைப்படங்கள் வந்தாலும், அது இந்த திரைப்படத்திற்கு ஈடாகாது என்று சொல்லும் அளவிற்கு இந்த படம் இருக்கும். ஏ.ஆர் ரகுமான் இசையில் 'காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்' பாடலும், ரோஜா ரோஜா பாடலும் இன்றைய இளம் தலைமுறையினரான 'ஜென் ஸி'களும் கொண்டாடும் பாடலாக அவர்களின் ப்ளே லிஸ்டில் உள்ளது. தற்போது புது பொலிவுடன் காதலர் தினம் திரைப்படம் ரீ ரிலீல் ஆக உள்ளது. இன்று காலை 11 மணிக்கு படத்தில் டிரைலர் வெளியாக உள்ளது. இந்த கிளாசிக் காதல் கதையை பெரிய திரையில் அனுபவிக்கும் வாய்ப்பு இன்றைய இளம் தலைமுறையினருக்கு கிடைத்துள்ளது. இந்த படமும் நிச்சயம் வசூலை பெறும் என நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











