பிரபாஸோட எக்ஸை இப்போ நான் தான் மெயின்டெயின் பண்றேன்.. பகீர் கிளப்பிய வலிமை பட வில்லன்!
ஹைதராபாத்: அஜித்தின் வலிமை படத்தில் வில்லனாக நடித்த தெலுங்கு நடிகர் கார்த்திகேயா சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் பிரபாஸின் எக்ஸை தற்போது அவர் தான் மெயின்டைன் பண்ணி ஓட்டிக் கொண்டிருப்பதாக வெளிப்படையாக கூறியுள்ளார்.
44 வயதாகும் நடிகர் பிரபாஸ் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் அடுத்த மாதம் ஜூன் 27-ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த படத்தில் புஜ்ஜி என்னும் காரை உருவாக்கி அதை தற்போது பல்வேறு நடிகர்களை அழைத்து ஓட்டிப் பார்க்க வைத்து படத்துக்காக புரமோஷன் செய்து வருகிறார். மேலும், அடுத்ததாக சலார் 2 படத்திலும் பிரபாஸ் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகுபலியை மிஞ்சுமா?: ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி 2 திரைப்படம் 2017-ம் ஆண்டு வெளியாகி ஏழு ஆண்டுகளுக்கு முன்னதாகவே 1800 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. ஆனால், அதன் பின்னர் பிரபாஸ் நடிப்பில் வெளியான எந்த ஒரு படமும் 1000 கோடி ரூபாய் வசூலை கூட தொடவில்லை. சலார் திரைப்படம் 700 கோடி ரூபாய் வசூலை எட்டிய நிலையில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் என மல்டி ஸ்டார் நடிகர்களுடன் பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி என பல வெயிட்டேஜ்களை ஏற்றியுள்ள கல்கி திரைப்படம் பாகுபலி படத்தின் வசூலை நெருங்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
வலிமை வில்லன்: RX 100 படத்தின் மூலம் பிரபலமான தெலுங்கு நடிகர் கார்த்திகேயா அஜித் நடித்த வலிமை படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் அவர், சமீபத்தில் கார் ஓட்டிக் கொண்டே பேட்டி ஒன்றை கொடுத்த வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் பிரபாஸின் எக்ஸை தான் மெயின்டெயின் செய்து வருவதாக கூறியுள்ளார்.

பிரபாஸின் எக்ஸ்: நடிகர் பிரபாஸின் பழைய காரான ஜாகுவார் காரை வாங்கிய கார்த்திகேயா தற்போது அந்த காரை பயன்படுத்தி வருவதாக கூறியுள்ளார். பிரபாஸின் ஜாகுவார் காரை பயன்படுத்துவதை தான் "Haha yes, it was #prabhas sir's EX" என ட்வீட் போட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.
புஜ்ஜி கார்: ஜாகுவார் காரை கார்த்திகேயாவுக்கு கொடுத்துவிட்டு தற்போது பிரபாஸ் அல்டிமேட் ஆக உருவாக்கப்பட்டுள்ள புஜ்ஜி காரை பயன்படுத்தி வருகிறார் என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் நடிகர் நாக சைதன்யா அந்த காரை ஓட்டி பார்த்த வீடியோக்களும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகேயா கைவசம்: எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படத்தில் பாடி பில்டரான கார்த்திகேயா நடித்து மாஸ் காட்டிய நிலையில், தொடர்ந்து தெலுங்கில் ஹீரோவாகவே நடித்து வருகிறார். பெடுருலங்கா 2012 படம் கார்த்திகேயா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான நிலையில் பஜே வாயு வேகம் படத்தை இந்த ஆண்டு ரிலீஸ் செய்ய காத்திருக்கிறார். பிரபாஸை தனக்கு ரொம்பவே பிடிக்கும் என்றும் அதனால் தான் அவரது காரை செகண்ட் ஹேண்டில் வாங்கி பயன்படுத்தி வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











