வலிமை நடிகர் போட்ட மாஸ் ட்வீட்.. உச்சி குளிர்ந்த தல ரசிகர்கள்.. அப்படி என்ன விஷயம் தெரியுமா?

சென்னை: வலிமை அப்டேட் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் ட்வீட் போடலன்னா என்ன? நம்ம வலிமை படத்தின் வில்லன் நடிகர் மாஸா ஒரு ட்வீட் போட்டு தல ரசிகர்களின் உச்சியை குளிர வைத்துள்ளாரே..

Recommended Video

Thala Ajith Raasi! Shootingல் சட்டைக்காக சண்டைப் போட்ட நடிகர் #KonjamFlashback

ஆர்.எக்ஸ் 100 படத்தின் ஹீரோ கார்த்திகேய கும்மகொண்டா வலிமை படத்தில் தல அஜித்துக்கு வில்லனாக நடித்து வருகிறார்.

நேற்று அவரது பிறந்தநாளை தல ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடினார்கள்.

எந்த தகவலும் இல்லை

எந்த தகவலும் இல்லை

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் படம் வலிமை என்பதை தவிர இதுவரை வேறு எந்த தகவலையும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. தல அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி முதல் வலிமை அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கசிந்த தகவல்கள்

கசிந்த தகவல்கள்

வலிமை படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. முன்னதாக ரஜினியின் காலா படத்தில் இவர் நடித்து இருந்தார். மேலும், நடிகர் பிரசன்னா வலிமை படத்திற்கு வில்லனாக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தேர்வு செய்யப்படவில்லை என்றும், அவருக்கு பதிலாக தெலுங்கு சினிமா ஹீரோ கார்த்திகேய கும்மகொண்டா வில்லனாக நடிக்க உள்ளார் என்ற தகவலும் கசிந்தன.

கடுப்பான ரசிகர்கள்

கடுப்பான ரசிகர்கள்

வலிமை படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேய கும்மகொண்டா ஆகிய நடிகர்கள் இணைந்துள்ளனர் என்ற தகவலை கூட தயாரிப்பாளர் போனி கபூர் ஏன் கூறவில்லை என்றும், வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கூட ஏன் இன்னும் வெளியிட வில்லை என்றும் தயாரிப்பாளர் போனி கபூர் மீது செம காண்டில் தல ரசிகர்கள் உள்ளனர். அவர் பதிவிடும் ட்வீட்களுக்கு கீழே அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

மாஸ் ட்வீட்

மாஸ் ட்வீட்

இந்நிலையில், வலிமை படத்தின் வில்லன் நடிகர் கார்த்திகேய கும்மகொண்டா, தற்போது ஒரு மாஸ் ட்வீட்டை போட்டு, தல ரசிகர்களின் உச்சியை குளிரவைத்துள்ளார். "என் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய தல ரசிகர்களுக்கு ரொம்ப நன்றி, கொஞ்சம் பொறுமையா இருங்க.. நீங்க எதிர்பார்த்ததை விட சிறப்பான ஒரு அப்டேட் வரப் போகுது என ட்வீட் போட்டுள்ளார்.

இது போதும் தலைவா

இது போதும் தலைவா

தயாரிப்பாளர் போனி கபூரே இதுவரை வலிமை படம் குறித்து ஒரு ட்வீட்டும் போட்டு தல ரசிகர்களை கட்டுப்படுத்தாத நிலையில், பிறந்தநாளை முன்னிட்டு ஆர்.எக்ஸ் 100 பட ஹீரோ, வலிமை பட வில்லன் கார்த்திகேய கும்மகொண்டா போட்ட இந்த மாஸ் ட்வீட்டை பார்த்த தல ரசிகர்கள், "இது போதும் தலைவா" என கொண்டாடி வருகின்றனர்.

வெயிட்டிங்கிலே வெறியாகுது

வெயிட்டிங்கிலே வெறியாகுது

கார்த்திகேய கும்மகொண்டா போட்ட அந்த ஒரே ஒரு ட்வீட் ஒட்டுமொத்த தல ரசிகர்களுக்கும் மாஸ் அப்டேட்டாகவே மாறி விட்டது. வெகு விரைவாக அப்டேட் வரப் போகும் சந்தோஷத்தில் வெயிட்டிங்கிலே வெறியாகுது என்றும், தரமான சம்பவம் இனிமேல் தான் நடக்கப்போகுது என்றும் ஏகப்பட்ட கமெண்ட்களை அஜித் ரசிகர்கள் போட்டு ட்விட்டரை அதிர வைத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X