வலிமை வில்லன் பட ஃபர்ஸ்ட் லுக்கே வந்துடுச்சு.. கால் மேல கால் போட்டு கலக்கும் கார்த்திகேயா!
ஹைதராபாத்: டோலிவுட் நடிகர் கார்த்திகேயாவின் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
வலிமை படத்தில் தல அஜித்துக்கு வில்லனாக நடித்து வருகிறார் கார்த்திகேயா.
வலிமை பட அப்டேட் ஏதும் இதுவரை வராத நிலையில், வலிமை பட வில்லனின் அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

ஆர்எக்ஸ் 100 ஹீரோ
2017ம் ஆண்டு வெளியான பிரேமதோ மீ கார்த்திக் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா. அந்த படத்தைத் தொடர்ந்து 2018ம் ஆண்டு வெளியான ஆர்எக்ஸ் 100 திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது.

வலிமை வில்லன்
ஹிப்பி, குணா 369, 90 எம்எல், கேங் லீடர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த கார்த்திகேயா கும்மகொண்டா தமிழில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அதிகாரப்பூர்வ அப்டேட் எதுவும் வெளியாகாத நிலையில், அஜித்துடன் நடிப்பது குறித்து கார்த்திகேயாவே ட்வீட் போட்டு அறிவித்து விட்டார்.
Recommended Video

ராஜா விக்ரமர்கா
வலிமை படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 600 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் இன்னும் ஒரு ஃபர்ஸ்ட் லுக் கூட வெளியாகவில்லை. இந்நிலையில், நடிகர் கார்த்திகேயா நடிப்பில் உருவாகி உள்ள புதிய படமான ராஜா விக்ரமர்கா படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

சிரஞ்சீவி படம்
இயக்குநர் ரவி ராஜா பினிசெட்டி இயக்கத்தில் கடந்த 1990ம் ஆண்டு நடிகர் சிரஞ்சீவி மற்றும் அமலா அகினேனி நடிப்பில் வெளியான ராஜா விக்ரமர்கா படத்தின் டைட்டிலையே தற்போது நடிகர் கார்த்திகேயாவின் புதிய படத்திற்கும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கால் மேல் கால் போட்டு
இயக்குநர் ஸ்ரீ சரிபள்ளி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸை தற்போது அர்ஜுன் ரெட்டி பட இயக்குநர் சந்திப் ரெட்டி வாங்கா வெளியிட்டுள்ளார். மேலும், இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஐடி துறையில் வேலை பார்ப்பது போல இருக்கும் கார்த்திக் லேப்டாப் இருக்கும் மேஜை மீது கால் மேல் கால் போட்டு கலக்கலாக அமர்ந்துள்ளார்.
அப்டேட் கொடுங்க
கொஞ்ச நாட்களாக யாரிடமும் வலிமை படம் குறித்த அப்டேட் கேட்காமல் இருந்து வந்த தல அஜித் ரசிகர்கள், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ள நிலையில், வலிமை பட வில்லன் கார்த்திகேயாவிடம் வலிமை படத்தின் அப்டேட் கொடுங்க என பரிதாபமாக கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











