அஜித்தின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் இது தானாம்... வலிமை நடிகர் வெளியிட்ட தகவல்
சென்னை : தென்னிந்திய நடிகர்களிலேயே வெளியுலகில் அதிகம் தலைகாட்டாமல் இருந்தாலும் ரசிகர்களை கவர தவறாமல் இருப்பவர் அஜித். அவர் என்ன செய்தாலும் அவரின் ரசிகர்கள் அதை வைரலாக்க தவறுவதில்லை.
அதே போல் திரையுலகில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் பல விஷயங்களில் முன்னுதாரணமாக இருக்கக் கூடியவர் தல அஜித். கடைசியாக அவர் நடித்த நேர்கொண்ட பார்வையில் வழக்கறிஞராக நடித்து, அதன் மூலம் ரசிகர்களுக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்தவர் அஜித்.

பொங்கல் ரிலீஸ்
தற்போது அஜித், டைரக்டர் ஹச்.வினோத் இயக்கிய வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இருக்கும் வலிமை, 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தான் கதை
த்ரில்லர் ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்டுள்ள வலிமை படம் தென்னிந்திய போலீஸ் ஒருவருக்கும் பைகர்ஸ் கிளப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாகக் கொண்டதாகும். இந்த படத்தில் ஹுமா குரேஷி, யோகிபாபு, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்தள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

அஜித்தின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்
வலிமை படத்தில் அஜித்தின் குடும்ப உறுப்பினராக நடித்திருப்பவர் ராஜ் ஐயப்பா. இவர் தற்போது அஜித்தின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டசை, அஜித்தின் அனுமதியுடன் ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார். சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை குறிக்கும் இந்த ஸ்டேட்டஸ் அனைவரையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

கேரக்டர்ன்னா என்ன
ராஜ் ஐயப்பா வெளியிட்டுள்ள அஜித்தின் ஸ்டேட்டஸ் ஸ்கிரீன்ஷாட்டில், ஏழை, நடுத்தர வர்க்கம், பணக்காரர் என்பதெல்லாம் குறிப்பது அவர்களின் பொருளாதார நிலையை குறிப்பது தான். கேரக்டரை குறிப்பது அல்ல. நல்லவர்கள் - கெட்டவர்கள் சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் இருக்கிறார்கள். அதனால் பொருளாதார அடிப்படையில் ஒவ்வொரு மனிதனின் கேரக்டரை முடிவு செய்வதை நிறுத்த வேண்டும். வேக் அப் எவ்ரிபடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

வைரலாக்கும் ரசிகர்கள்
அஜித்தின் போஸ்ட்டை ஷேர் செய்த ராஜ் ஐயப்பா அதோடு, அஜித் சாரின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் இடம்பெற்றுள்ள இந்த மெசேஜ் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அவரின் அனுமதியுடன் இதை பகிர்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். ராஜ் ஐயப்பாவின் இந்த போஸ்ட் அஜித் ரசிகர்களால் செம வைரலாக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











