தவறாக நடந்தால் போலீஸ்ல சொல்லுங்க.. மீ டுவின் புனிதத்தை காப்பாத்துங்க.. அஜித் ஹீரோயின் ஆக்ரோஷம்!

By

சென்னை: யாரும் தவறாக நடந்தால் போலீசில் புகார் செய்யுங்கள், மீடுவின் புனிதத்தை காப்பாற்றுங்கள் என்று அஜித் பட ஹீரோயின் ஹூமா குரேஷி தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை ஹூமா குரேஷி. ரஜினிகாந்தின் காலா படத்தில் இவர் நடித்திருந்தார்.

இப்போது அஜித்தின் வலிமை படத்தில் அவர் ஜோடியாக நடித்துவருகிறார். இந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார்.

பாயல் கோஷ்

பாயல் கோஷ்

அக்‌ஷய்குமாருடன் பெல்பாட்டம் என்ற இந்தி படத்திலும் இப்போது நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் ஆக்லாந்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது, நடிகை பாயல் கோஷ், பாலியல் புகார் கூறி இருந்தார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இமைக்கா நொடிகள்

இமைக்கா நொடிகள்

பாயல் கோஷ், தமிழில் தேரோடும் வீதியிலே என்ற படத்தில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நடித்துள்ளார். இயக்குனர் அனுராக் காஷ்யப், தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் அனுராக் காஷயப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் நடிகர், நடிகைகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஹூமா குரேஸி

ஹூமா குரேஸி

நடிகை பாயல் கோஷ், டாப்ஸி, ரிச்சா சதா, மஹி கில், ஹூமா குரேஸி உள்ளிட்ட சில நடிகைகளையும் குறிப்பிட்டு அவர்களும் பாதிக்கப்பட்டதாக கூறியிருந்தார். அவர்கள் அப்படி ஏதும் நடந்துகொள்ளவில்லை என்று அனுராக் காஷ்யபுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகை ஹூமா குரேஸி தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:

தவறாக நடக்கவில்லை

தவறாக நடக்கவில்லை

அனுராக்கும் நானும் 2012-13 ஆம் ஆண்டு பணியாற்றினோம். எனது தனிப்பட்ட அனுபவத்தில் அவர் சிறந்த இயக்குனர், அன்பான நண்பர். அவர் என்னிடமோ, வேறு யாருடனுமோ தவறாக நடந்து கொள்ளவில்லை. இருந்தாலும் துஷ்பிரயோகம் செய்ததாக கூறுபவர்கள் அதை போலீஸ் உள்ளிட்ட நீதித்துறை நிர்வாகத்திடம்தான் முறையிட வேண்டும்.

விரும்பவில்லை

விரும்பவில்லை

சோசியல் மீடியா சண்டைகள் நம்பாததால், இதுவரை, இந்த விஷயத்தில் கருத்துச் சொல்லவில்லை. இந்த குழப்பத்துக்குள் என்னையும் இழுத்துவிட்டதால் கோபமாக உணர்கிறேன். எனக்காக மட்டுமல்ல, ஒவ்வொரு பெண்ணுக்காகவும். இதற்கு மேலும் இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

Recommended Video

Nayanthara Villain Anurag Meetoo case • Payal Gosh | Filmibeat Tamil
அணுக வேண்டாம்

அணுக வேண்டாம்

#MeToo வின் புனிதத்தை பாதுகாப்பதில் ஆண் பெண் இருவருக்கும் கூட்டுப் பொறுப்பு இருக்கிறது. இதுதான் என் கடைசி பதில். இந்த பாலியல் புகார் விஷயத்தில் மேலும் அறிக்கை வெளியிட, என்னை யாரும் அணுக வேண்டாம். இவ்வாறு நடிகை ஹூமா குரேஸி கூறியுள்ளார். இதற்கிடையே இந்த விவகாரத்தில், நடிகை பாயல் ஓஷிவாரா போலீசில் அனுராக் மீது புகார் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X