வலிமை நாயகி ஹூமா குரேஷியின் ஹாலிவுட் பட டிரைலர் ரிலீஸ்
மும்பை : ரஜினி நடித்த காலா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஹூமா குரேஷி. இவர் தற்போது, ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது வலிமை.
தமிழ் படங்களில் நடிப்பதுடன், தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் அறிமுகமாகி உள்ளார். ஜாக் ஸ்னைடர் டைரக்டர் செய்யும் ஆர்மி ஆஃப் தி டெட் என்ற படத்தில் தான் ஹூமா நடித்து வருகிறார். இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஜோம்பி தாக்குதலால் நோய் பரவலால் தனிமைபடுத்தப்பட்டுள்ள லாஸ் வேகாஸ் நகரில் உள்ள கிளப்பில் இருக்கும் 200 மில்லியன் தொகையை மீட்பது தான் படத்தின் கதை. இதை விறுவிறுப்பாக, த்ரில்லாக சொல்லி உள்ளனர்.
ஜஸ்டிஸ் லீக் என்ற படத்தை இயக்கிய ஜாக் ஸ்னைடர் தான் இந்த படத்தையும் இயக்குகிறார். இதில் டேவ் பவ்டிஸ்டா, எலா புர்நெல், ஓமரி ஹர்ட்விக், ஹிரோயுகி சனதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டிரைலர் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதனை ஹூமா குரேஷி, மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், ஜீனியரின் படத்தில் சிறிய பாகமாக இணைந்திருப்பதில் சூப்பர் பெருமை என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











