கொரோனாவுக்கு தாய் பலி...மனதை உலுக்கிய அஜித், கமல் பட குழந்தை நட்சத்திரத்தின் சோகம்

சென்னை : கொரோனா இரண்டாம் அலையில் பல உயிர்கள் பலியாகி வருவது தொடர் வருகிறது. அதிலும் திரையுலகை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவம் கோலிவுட்டை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தற்போது மற்றொரு அதிர்ச்சியாக தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் குழந்தை நட்சத்திரமான ஆலமின் 34 வயது தாய் யாஷிம் கொரோனாவிற்கு பலியாகி உள்ளார். ஆலம் வாழ்க்கையில் நடந்த இந்த கொடூர துயர சம்பவம் பலரையும் கலங்க வைத்துள்ளது.

 கமலின் பேரனான நட்சத்திரம்

கமலின் பேரனான நட்சத்திரம்

ராயபுரத்தை சேர்ந்த சேல்ஸ்மேனான முபாரக்கிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர்களில் ஒருவன் தான் 10 வயதாகும் ஆலம். இவன், அஜித் நடிக்கும் வலிமை படத்திலும், ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்திலும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறான். குறிப்பாக இந்தியன் 2 படத்தில் கமலின் பேரனாக நடித்து வருகிறான்.

குடும்பமே கொரோனாவால் பாதிப்பு

குடும்பமே கொரோனாவால் பாதிப்பு

இந்நிலையில் ஆலமின் தாய் யாஷிம் மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருந்துள்ளார். சமீபத்தில் இவர்களின் குடும்பத்தில் உள்ள அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை படுக்கை வசதி கிடைக்காததால், இவர்கள் அனைவரும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர்.

முதல் அலையிலும் பாதிப்பு

முதல் அலையிலும் பாதிப்பு

கொரோனா முதல் அலையிலும் இவர்கள் குடும்பத்தினர்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பிறகு நீண்ட போராட்டத்திற்கு பிறகு அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். ஆனால் இந்த முறை கர்ப்பமாக இருந்ததால் யாஷ்மினின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமூக வலைதளத்தில் நிதி

சமூக வலைதளத்தில் நிதி

முன்னதாக ஆலமின் தந்தைக்கு ஏற்பட்ட விபத்தால் அவரால் வேலைக்கு செல்ல முடியாமல், வீட்டு செலவுகளை சமாளிக்க முடியாமல் இருந்துள்ளார். இந்நிலையில் ஆலம் நடிகராகி விட்டதால் இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி, பலரும் நிதி அளித்துள்ளனர். கிட்டதட்ட ரூ.9 லட்சம் நிதி கிடைத்ததை வைத்து தனது தாய்க்கு ஆலம், மருத்துவ செலவுகளை கவனித்துள்ளார்.

நுரையீரலில் 80 சதவீத பாதிப்பு

நுரையீரலில் 80 சதவீத பாதிப்பு

ஆனால் துரதிஷ்டவசமாக ஆலமின் தாய் யாஷினின் நுரையீரல் 80 சதவீதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அவருக்கு பிரசவ வலியும் எடுத்துள்ளது. டாக்டர்கள் கடுமையாக போராடியதை அடுத்து யாஷினுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்த பிறகு யாஷினிற்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

தாய் இறந்தது கூட தெரியாத துயரம்

தாய் இறந்தது கூட தெரியாத துயரம்

இந்த சமயத்தில் ஆலமும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததால், தனது தாய் இறந்தது அவனுக்கு தெரியாது. முபாரக், தனது நண்பர்கள் சிலரின் உதவியுடன் யாஷினின் இறுதி சடங்குகளை செய்துள்ளார். மேலும் ஆலமின் சம்பள பாக்கியான மூன்றரை லட்சத்தை தந்து உதவும்படி வலிமை மற்றும் இந்தியன் 2 பட தயாரிப்பாளர்களிடமும் முபாரக் உதவி கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X