இந்த பொங்கலுக்கு தியேட்டர்கள் தெறிக்கப் போகிறது.. தணிக்கை, ரிலீஸ் தேதியை அறிவித்த வலிமை படக்குழு!
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள வலிமை திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் வலிமை திரைப்படம் ஒடிடியில் வெளியாகுமா? என கேள்வி எழுந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.
வலிமை படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியான நிலையில், அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் ட்விட்டரை தெறிக்க விட்டு வருகின்றனர்.

ஒரே நாளில் 10 மில்லியன்
போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள வலிமை திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் நேற்று மாலை 6.30 மணிக்கு வெளியானது. வெறும் 22 மணி நேரத்தில் 10 மில்லியன் வியூஸ் கடந்து சாதனை படைத்துள்ளது.

டிரைலரில் சொல்லல
வலிமை டிரைலரில் பொங்கலுக்கு வலிமை திரைப்படம் வெளியாகிறது என அறிவித்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கவில்லை. மேலும், தியேட்டர் ரிலீஸ் என்கிற அறிவிப்பையும் வலிமை தயாரிப்பாளர் போனி கபூர் அறிவிக்கவில்லை. இந்நிலையில், தற்போது அது தொடர்பான அறிவிப்பை போனி கபூர் வெளியிட்டுள்ளார்.

ரிலீஸ் எப்போ
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஜனவரி 7ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், நடிகர் அஜித் குமாரின் வலிமை திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் கூறியுள்ளார்.

தணிக்கை சான்றிதழ்
வலிமை படத்தின் தணிக்கை நிறைவேறாத நிலையில், தான் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிரைலரில் படக்குழு வெளியிடவில்லை. இந்நிலையில், இன்று வலிமை திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

ஒடிடி இல்லை
கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், வலிமை திரைப்படம் தியேட்டரில் வெளியாவது சாத்தியமா? என்கிற கேள்வி எழுந்தது. மேலும், ஒடிடியில் மிக பெரிய படம் வெளியாக போகிறது என சில டிராக்கர்கள் கிளப்பி விட்ட பீதி காரணமாக வலிமை ஒடிடி ரிலீஸ் தான் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகு என்பதை உறுதிப்படுத்தி உள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.


Click it and Unblock the Notifications











