அதிரடியாக குறைந்து போன வலிமை வசூல்.. 5வது நாளில் எவ்வளவு தெரியுமா? வாய் திறக்காத போனி கபூர்!
சென்னை: அஜித்தின் வலிமை படத்தின் வசூல் முதல் வாரத்தில் ஜெட் வேகத்தில் இருந்த நிலையில், திங்கட்கிழமையான நேற்று முதல் அதிரடியாக குறைய ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியான வலிமை திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன.
அதன் காரணமாக 14 நிமிட காட்சிகளை வலிமை படக்குழு கத்தரித்தது. இந்நிலையில், 5வது நாள் வலிமை படம் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

அஜித்தின் வலிமை
போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியானது வலிமை. பைக் ரேஸ் மற்றும் தாய் பாசத்தை கலந்து கட்டி இளைஞர்களையும், குடும்ப ரசிகர்களையும் கவர் பண்ணும் ஃபார்மூலாவை இந்த முறை எச். வினோத் கையில் எடுத்திருந்தார். அதுவே அவருக்கான நெகட்டிவ் விமர்சனங்கள் குவியவும் காரணமாக மாறியது.

100 கோடி
தமிழ்நாட்டிலேயே நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் ஞாயிற்றுக்கிழமை ஷோவுடன் சேர்த்து 100 கோடி வசூலை தாண்டியது. முதல் மூன்று நாட்களில் உலகளவில் வலிமை திரைப்படம் 100 கோடி வசூலை ஈட்டியதாக தகவல்கள் வெளியாகின. அஜித் குமார் ரசிகர்கள் சந்தோஷத்தில் சமூக வலைதளத்தில் ஆரவாரம் செய்தனர்.

5வது நாள் வசூல்
முதல் நாளில் 36.17 கோடி ரூபாய் வசூலை வலிமை திரைப்படம் அள்ளி மற்ற தமிழ் சினிமா படங்கள் இதுவரை செய்திருந்த ரெக்கார்ட்டுகளை காலி செய்தது. இரண்டாம் நாளில் 24.62 கோடியும், 3ம் நாளில் 23 கோடியும், 4ம் நாளான ஞாயிற்றுக்கிழமை 30 கோடி ரூபாய் வசூலையும் அள்ளி உள்ளது வலிமை. திங்கட்கிழமையான நேற்று வலிமை படத்தின் வசூல் அதிரடியாக குறைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிரடியாக குறைந்த வசூல்
திங்கட்கிழமையான நேற்று வலிமை படத்தின் வசூல் வெறும் 10 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. ஆலியா பட்டின் பாலிவுட் திரைப்படமான கங்குபாய் கத்தியவாடி படத்தின் முதல் நாள் வசூலே 10 கோடி தான் என்பதால், வார நாட்களில் இந்த வசூலே நல்ல வசூல் தான் என டிராக்கர்கள் கூறி வருகின்றனர். இதுவரை வலிமை திரைப்படம் தமிழ்நாட்டு அளவில் 113 கோடி வசூல் செய்திருக்கலாம் என்றும் உலகளவில் 140 முதல் 150 கோடி வரை வசூல் வந்திருக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video

வாய் திறக்காத போனி கபூர்
ஆனால், இதுவரை முதல் நாள் வசூல் கூட இவ்வளவு தான் வந்தது என்பதை வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் மெளனம் காத்து வருகிறார். சமீபத்தில் வெளியான மாநாடு, புஷ்பா உள்ளிட்ட படங்களின் வசூலை அதன் தயாரிப்பாளர்கள் ஒளிவு மறைவின்றி அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து இருந்த நிலையில், போனி கபூரும் வலிமை படத்தின் உண்மையான வசூல் எவ்வளவு என அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











