மீண்டும் டிரெண்டிங்கான வலிமை...பட்டையை கிளப்பும் ஒர்க்கிங் ஸ்டில்ஸ்

சென்னை : போனி கபூர் தயாரிப்பில் ஹச்.வினோத் இயக்கி, அஜித் நடித்துள்ள படம் வலிமை. அஜித்தின் 60 வது படமாக உருவாகி உள்ள இந்த படம் இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வருகிறது. ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த படம் தான், ட்விட்டரில் அதிக முறை டிரெண்டிங் ஆக்கப்பட்ட படமாக உள்ளது.

அஜித் ரசிகர்கள் விடாமல் அப்டேட் கேட்டே வலிமை படத்தை உலக பாப்புலர் ஆக்கி விட்டனர். அஜித் ரசிகர்கள் அல்லாதவர்களும், அப்படி என்ன தான்ப்பா படம் அது. எப்போ தான் ரிலீஸ் பண்ணுவீங்க என பொறுமை இழந்து கேட்கும் அளவிலான நிலையை அஜித் ரசிகர்கள் உருவாக்கி விட்டனர். பிரபலங்கள் பலரும் வலிமை அப்டேட் பற்றி பேசியே தங்கள் பதிவுகளை வைரலாக்கி உள்ளனர்.

நாங்க வேற மாரி

நாங்க வேற மாரி

வலிமை படத்தின் ஃபஸ்ட்லுக், மோஷன் போஸ்டர் ஆகியவற்றை தொடர்ந்து படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டது. இது அஜித்தின் 29 ஆண்டு கால சினிமா வாழ்க்கையை கொண்டாடும் விதமாக மேக்கிங் வீடியோவுடன் இந்த பாடல் வெளியிடப்பட்டது. நாங்க வேற மாரி என துவங்கும் இந்த பாடலை அஜித் ரசிகர்கள் வேற லெவலில் ஹிட்டாக்கி விட்டனர்.

மிரட்டலாக க்ளிம்ப்ஸ்

மிரட்டலாக க்ளிம்ப்ஸ்

வலிமை தீபாவளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டார். இதைத் தொடர்ந்து படத்தின் ஃபஸ்ட் டீசர் க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது. மிரட்டலான பைக் ரேஸ், அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியிடப்பட்ட இந்த க்ளிம்ப்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

டிரெண்டிங்கான ஸ்டில்ஸ்

டிரெண்டிங்கான ஸ்டில்ஸ்

இந்நிலையில் இன்று திடீரென வலிமை படத்தின் ஒர்க்கிங் ஸ்டில்ஸ் வெளியானது. இதையும் விட்டு வைக்காமல் பயங்கரமாக டிரெண்ட் ஆக்கி உள்ளனர் அஜித் ரசிகர்கள். இந்த ஸ்டில்கள் வெளியானதை அடுத்து, ட்விட்டரில் HVinoth, Valimai,AjithKumar, ValimaiExclusiveStills போன்ற ஹாஷ்டேகுகள் உருவாக்கப்பட்டு டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது. இதனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கதை என்னவா இருக்கும்

கதை என்னவா இருக்கும்

வலிமை ஃபஸ்ட் சிங்கிளை தொடர்ந்து தற்போது படத்தில் குடும்பத்துடன் அஜித் இருக்கும் ஸ்டில் வெளியாகி உள்ளது. இதே போல் முதல் முறையாக ஹீரோயின் ஹுமா குரேஷியின் ஸ்டிலும் வெளியாகி உள்ளது. இதை பார்த்து விட்டு, படத்தின் கதையை கணிக்கவே முடியவில்லையே என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

ரிலீஸ் தேதி சொல்லுங்கப்பா

ரிலீஸ் தேதி சொல்லுங்கப்பா

தரமான சம்பவம் காத்திருக்கு போல. ஃபுல் என்டர்டைன்மென்ட், ஆக்ஷன் காத்திருக்கு போல என அஜித் ரசிகர்கள் பல விதங்களில் இந்த ஃபோட்டோக்களை புகழ்ந்து வருகிறார்கள். இருந்தாலும் ஒரு சிலர், படம் பொங்கல் ரிலீஸ் என்று மட்டும் தான் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் தேதியை இன்னும் கன்ஃபார்ம் பண்ண மாட்டேங்குறீங்களேன்னு தங்களின் ஆதங்கத்தை கொட்டி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X