10 நாட்களுக்குள் திருவிழா இருக்கும்.. இந்த ஜூலை தல ஜூலை.. பிரபல இயக்குநர் அசத்தல் தகவல்!
சென்னை: வலிமை படத்தின் அப்டேட் 10 நாட்களுக்குள் இருக்கும் என பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார்.
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து நடிகர் அஜித், இயக்குநர் ஹெச் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் இணைந்துள்ள படம் வலிமை.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில் லாக்டவுன் காரணமாக தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

தள்ளி வைக்கப்பட்ட அப்டேட்
இதனை தொடர்ந்து கடந்த மே ஒன்றாம் தேதி அஜித் பிறந்தநாளில் வலிமை படத்தின் அப்டேட் வெளியாகும் அறிவிப்பு வெளியானது. ஆனால் அப்போது கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்ததால் அப்டேட் வெளியிடப்படுவது தள்ளி வைக்கப்பட்டது.

அலுத்துப்போன ரசிகர்கள்
படத்தின் அப்டேட்டை கேட்டு கேட்டு ரசிகர்கள் அலுத்து போய்விட்டனர். அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலரிடமும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் நச்சரித்தனர்.

அஜித் வருத்தம்
இதனால் நொந்துப்போன அஜித் தன்னுடைய ரசிகர்கள் என்று சிலர் பிரபலங்களிடம் அப்டேட் கேட்பது வருத்தமளிப்பதாக கூறினார். சரியான நேரத்தில் படக்குழு வெளியிடும் என்றும் கூறியிருந்தார்.

தள்ளி வைக்கப்பட்ட அப்டேட்
இதனை தொடர்ந்து கடந்த மே ஒன்றாம் தேதி அஜித் பிறந்தநாளில் வலிமை படத்தின் அப்டேட் வெளியாகும் அறிவிப்பு வெளியானது. ஆனால் அப்போது கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்ததால் அப்டேட் வெளியிடப்படுவது தள்ளி வைக்கப்பட்டது.

நாள்தோறும் ஹேஷ்டேக்
ஆனாலும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் நாள்தோறும் ஒரு ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர். இதனால் படத்தின் இசையமைப்பாளர், ஸ்டண்ட் மாஸ்டர், படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் என பலரும் படம் குறித்து ஒவ்வொரு தகவலை கூறி வருகின்றனர்.

இயக்குநர் மோகன் ஜி
ஆனால் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் வண்ணாரப்பேட்டை, திரௌபதி ஆகிய படங்களின் இயக்குநரான மோகன் ஜி வலிமை படம் குறித்து ட்விட்டியுள்ளார்.

தல ஜூலை
அவர் பதிவிட்டிருப்பதாவது, விரைவில் வலிமை திருவிழா.. தல ரசிகர்களே 10 நாட்களுக்குள் திருவிழா இருக்கும்.. இந்த ஜூலை தல ஜூலை என்றும் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த அஜித் ரசிகர்கள் செம ஹேப்பியாகியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











