வலிமை ஃபர்ஸ்ட் லுக்.. அந்த படம் போஸ்டர் மாதிரி இருக்கே.. இந்த விஷயங்களை கவனீச்சீங்களா!
சென்னை: வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் ஏற்கனவே வெளியான படத்தில் இடம்பெற்ற காட்சிகளை நினைவுப்படுத்துவதாக கூறப்படுகிறது.
நடிகர் அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிக்கும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக வலிமை அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் அலுத்து போய்விட்டனர். சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரிடமும் அப்டேட் கேட்டு வந்தனர்.

அப்டேட் பசிக்கு தீனி
அதுமட்டுமின்றி வெளிநாடுகளில் நடக்கும் கிரிக்கெட் மற்றும் கால்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகளிலும் வலிமை அப்டேட் கேட்டு விரக்தியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் அவர்களின் அப்டேட் பசிக்கு தீனி போடும் வகையில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.

வலிமை ஆதிக்கம்
மரண மாஸாக உள்ள மோஷன் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் நேற்று முதலே சமூக வலைதளங்களில் ட்ரென்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். இதனால் நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் வலிமை ஹேஷ்டேக் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

விவேகத்தை நினைவுப்படுத்துகிறது
அதோடு இந்திய சினிமாவில் அதிக லைக்ஸ்களை குவித்த மோஷன் போஸ்டர் என்ற சாதனையையும் படைத்துள்ளது அஜித்தின் வலிமை. இந்நிலையில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றுள்ள சில விஷயங்கள் அஜித்தின் விவேகம் படத்தை நினைவுப்படுத்துவதாக கூறப்படுகிறது.

பழைய கன், கூலர்ஸ்
அஜித், காஜல் அகர்வால் நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான படம் விவேகம். இந்தப் படத்தின் போஸ்டர்களில் இடம்பெற்ற பழைய கன், அஜித்தின் கூலர்ஸ் மற்றும் ஜர்க்கின் ஆகியவை வலிமை ஃபர்ஸ்ட் லுக்கிலும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

நெருப்பு பிழம்பு
அதேபோல் விவேகம் போஸ்டரில் அஜித்துக்கு பின்னால் இருக்கும் நெருப்பு பிழம்பு போல் வலிமை போஸ்டரிலும் அஜித்துக்கு பின்னால் நெருப்பு பிழம்பு உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் வலிமை போஸ்டர் விவேகம் போஸ்டரை நினைவுப்படுத்துவதாக உள்ளது என கூறி வருகின்றனர்.
Recommended Video

டயர் க்ரீப்
இதனிடையே வலிமை ஃபான்ட் டிசைன், டயரில் உள்ள க்ரீப் போன்று உள்ளதையும் குறிப்பிட்டு வருகின்றனர். ஏற்கனவே வலிமை படத்தின் கதை ரேஸ் மாஃபியாவை மையப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அஜித் ரேஸ் காஸ்ட்யூமில் உள்ளது படத்தில் பல தரமான சம்பவங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











