ரிலீசுக்கு முன்பாகவே பட்டையை கிளப்பும் வலிமை... டிக்கெட் புக்கிங்கில் ரசிகர்கள் ஆர்வம்

மும்பை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை.

இந்தப் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இந்தியிலும் இந்தப் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நடிகர் அஜித்

நடிகர் அஜித்

நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி 2 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்தப் படத்தில் இயக்குநர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூருடன் இணைந்து அஜித் பணியாற்றியிருந்தார். அந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றிருந்தது.

24ம் தேதி ரிலீஸ்

24ம் தேதி ரிலீஸ்

ஆயினும் வழக்கமான அஜித் படம் போல இல்லாமல் அவர் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அதே எச் வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் அஜித் இணைந்துள்ள படம் வலிமை. இந்தப் படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருந்த நிலையில் தற்போது வரும் 24ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

சிறப்பான பிரமோஷன்

சிறப்பான பிரமோஷன்

கடந்த பொங்கலன்றே படம் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா பரவல் மற்றும் அதையடுத்த கட்டுப்பாடுகளால் படம் தற்போது ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கு சிறப்பான பிரமோஷனை கொடுத்துள்ளது.

ரசிகர்கள் தாறுமாறு பிரமோஷன்

ரசிகர்கள் தாறுமாறு பிரமோஷன்

அஜித் படத்திற்கு அவரது ரசிகர்களே தாறுமாறாக பிரமோஷனை கொடுப்பார்கள் என்றாலும் இந்தப் படத்திற்கு தயாரிப்பாளர் போனி கபூர் தினந்தோறும் ஒரு அப்டேட் என பிரமோஷனை கொடுத்தது மேலும் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

புக் செய்ய ரசிகர்கள் ஆர்வம்

புக் செய்ய ரசிகர்கள் ஆர்வம்

இந்தப் படத்தை புக் செய்ய புக் மை ஷோவில் லட்சக்கணக்கில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 19 லட்சத்து 18 ஆயிரம் படம் படத்தை புக் செய்ய ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

இந்தியில் சிறப்பு ஸ்கிரீனிங்

இந்தியில் சிறப்பு ஸ்கிரீனிங்

இந்நிலையில் இந்தப் படத்தை பாலிவுட்டில் சிறப்பு ஸ்கிரீனிங் செய்துள்ளது படக்குழு. படத்தை பார்த்த பாலிவுட் பிரபலங்கள் சிலர் சிறப்பான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். படம் திரையரங்குகளை எரிக்கும் என்று சமீபத்தில் பாலிவுட் பிரபலம் ஒருவர் தெரிவித்திருந்தார்.

த்ரில்லான அனுபவம்

த்ரில்லான அனுபவம்

படத்தில் இடைவேளை வரையில் ரசிகர்களுக்கு மூச்சு விடக்கூட நேரமில்லாமல் அடுத்தடுத்த சிறப்பான காட்சிகளை எச் வினோத் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. முதல்கட்டத்தில் ரசிகர்களுக்கு மிகவும் த்ரில்லான அனுபவம் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாலிவுட் ரசிகர்கள் ஆர்வம்

பாலிவுட் ரசிகர்கள் ஆர்வம்

இந்நிலையில் படத்தை பார்ப்பதற்கு வட இந்திய ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். படம் மிகச் சிறந்த வெற்றியை தமிழில் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் பெறும் என்று எதிர்பார்கக்ப்படுகிறது. இன்னும் சில தினங்களில் திரையரங்குகள் அனைத்தும் அதிரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X