தீப்பொறி பறக்கும்… Valimai Glimpse… ஹேஸ்டேக்கை தெறிக்கவிடும் ரசிகர்கள்
சென்னை : வலிமை திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தீப்பொறி பறக்க, திகிலூட்டும் வசனத்துடன் வெளியாகி உள்ள இந்த முன்னேட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் வாயடைந்து போயுள்ளனர்.
வெளியான சிறிது நேரத்திலேயே அஜித்தின் ரசிகர்கள் #ValimaiGlimpse ஹேஸ்டேக் தெறிக்கவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

வினோத் இயக்கத்தில்
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தீபாவளி வெளியீடு, கிறிஸ்துமஸ் வெளியீடு என்று பல்வேறு வெளியீட்டுத் தகவல்கள் வெளியாகி வந்தன. வலிமை 2022-ம் ஆண்டு பொங்கல் வெளியாகும் என்ற சூப்பர் வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அந்தரத்தில் பைக்
இந்நிலையில், வலிமை படத்திலிருந்து 2 நிமிடம் ஒடக்கூடிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த வீடியோ தொடங்கும் போதே வலிமை அளவற்ற வலிமை... இதுவே இப்போதை தேவை என்ற வரிகளுடன் தொடங்குகிறது. பைக் அந்தரத்தில் பறக்க நீங்கள் கடைந்து எடுத்த விஷம் நாங்கள்.... சாத்தானின் அடிமைகள் நாங்கள் என்ற திகிலூட்டும் வாசகங்கள் பதறவைக்கின்றன.

தெறிக்கவிட்ட முன்னோட்ட வீடியோ
தீப்பொறி பறக்க மாஸா நிற்கிறார் அஜித்... பைக் வேகத்துடன் பறக்க பின்னணி இசை மிரளவைக்கிறது... அஜித் தனக்கேரிய பாணியில் நான் கேம் ஆரம்பிச்சி ரொம்ப நேரம் ஆச்சு தம்பி என்றார். ஒன்னரை நிமிடம் ஓடக்கூடிய இந்த முன்னோட்ட வீடியோக அனைவரையும் வாய் பிளந்து பார்க்க வைத்துள்ளது. இந்த வீடியோ 6 மணி வெளியான நிலையில் அஜித்தின் ரசிகர்கள் #ValimaiGlimpse ஹேஸ்டேக் தெறிக்கவிட்டு வைரலாக்கி வருகின்றனர். இந்த முன்னோட்ட வீடியோ வெளியான ஒரு மணிநேரத்தில், 126K பார்வையாளர்களையும் கடந்து போய் கொண்டே இருக்கிறது.

யுவன் சங்கர் ராஜா
இப்படத்தில் படத்தில் கார்த்திகேயா, ஹியூமா குரோஷி, யோகி பாபு, புகழ் உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











