இன்னைக்கு பெரிய சம்பவம் காத்திருக்கு.. வலிமை Glimpse இன்று மாலை 6 மணிக்கு வெளியாகப் போகுதாம்!

சென்னை: தல ரசிகர்களுக்கு இன்று மாலை மிகப்பெரிய ட்ரீட் காத்திருக்கிறது.

தல அஜித்தின் வலிமை திரைப்படத்தின் சில நொடி காட்சிகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டரில் #ValimaiGlimpse என்கிற ஹாஷ்டேக்கை போட்டு அஜித் ரசிகர்கள் இன்று பெரிய சம்பவத்தை செய்ய காத்திருக்கின்றனர்.

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் தல அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா நடித்துள்ள வலிமை திரைப்படம் பொங்கல் 2022க்கு வெளியாகும் என்கிற அதிரடியான அப்டேட்டை எந்தவொரு புதிய போஸ்டரும் இல்லாமல் ட்வீட் மட்டும் போட்டு தயாரிப்பாளர் போனி கபூர் நேற்று அறிவித்தார்.

டீசர் வேண்டும்

டீசர் வேண்டும்

வலிமை படம் பொங்கலுக்கு தள்ளிப் போன நிலையில், படத்தின் டீசரையாவது வெளியிடுங்கள் என தல ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில், டீசரை விட குட்டி வீடியோ ஒன்றை படக்குழு வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வலிமை க்ளிம்ஸ்

வலிமை க்ளிம்ஸ்

#ValimaiGlimpse எனும் ஹாஷ்டேக்கை போட்டு கண்டிப்பாக இன்று மாலை தல தரிசனத்தை காண வேண்டும் என காலையில் இருந்தே ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களை தெறிக்க விட்டு வருகின்றனர். இந்நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே Valimai Glimpse இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்கிற ஹாட் அப்டேட்டும் தற்போது கிடைத்துள்ளது.

தரமான சம்பவம்

தரமான சம்பவம்

இப்பவே #ValimaiGlimpse ஹாஷ்டேக்கை இந்தியளவில் டிரெண்ட் செய்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு இன்று மாலை வலிமை படத்தின் சின்ன டீசர் வெளியானால் வேற லெவலில் தரமான சம்பவத்தை செய்து ஏகப்பட்ட சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்கிற வெறியோடு காத்திருக்கின்றனர்.

தீபாவளிக்கு டிரைலர்

தீபாவளிக்கு டிரைலர்

வலிமை கொண்டாட்டம் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பமாக உள்ளது. வலிமை க்ளிம்ஸை தொடர்ந்து படத்தின் அடுத்த சிங்கிளை வெளியிட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா காத்திருப்பதாகவும், தீபாவளிக்கு வலிமை படத்தின் டிரைலர் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

யாரு வந்தாலும்

யாரு வந்தாலும்

வரும் பொங்கலுக்கு நாடு முழுவதும் பல முன்னணி நடிகர்கள் படங்கள் பான் இந்தியா படங்கள் வெளியாக உள்ள நிலையில், பொங்கல் போட்டியில் யாரு வந்தாலும் தல அஜித்தின் வலிமை மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை படைக்கும் என தல ரசிகர்கள் உறுதியாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X