அஜித்தின் 'வலிமை'...போனி கபூர் வெளியிட்ட அசத்தல் தகவல்
சென்னை : அதிகம் எதிர்பார்க்கப்படும் தமிழ் படங்களில் ஒன்று அஜித் நடிக்கும் 'வலிமை' படம். 'நேர் கொண்ட பார்வை' படத்திற்கு பிறகு, டைரக்டர் ஹச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் உடன் இரண்டாவது முறையாக அஜித் இணைந்துள்ள படம் இது.
Recommended Video
பிரதமர், முதல்வர் என அனைவரிடமும் அஜித் ரசிகர்கள் 'வலிமை' அப்டேட் கேட்டது இந்த படத்திற்கு கூடுதல் பப்ளிசிட்டி ஆகி விட்டது. அஜித் கோரிக்கை வைத்த பிறகும் 'வலிமை' அப்டேட் கேட்பதை அவரது ரசிகர்கள் நிறுத்தியதாக தெரியவில்லை.

தல பிறந்தநாளில் ஃபஸ்ட்லுக்
இதனால் அஜித்தின் 50 வது பிறந்த நாளான மே 1 ம் தேதியன்று 'வலிமை' படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அஜித்தின் பல விதமான ஸ்டில்கள், டீசர், டிரைலர் என அடுத்தடுத்து வெளியிட வேண்டும் என படக்குழுவிடம் அஜித்தும் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ப்ரோமோஷனில் ஸ்வாரஸ்யம்
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் வலிமை படம் பற்றிய அசத்தலான தகவலை வெளியிட்டுள்ளார். போனி கபூர் கூறுகையில், "அனைவரும் அஜித்தின் ஃபஸ்ட்லுக்கை பார்க்க ஆர்வமாக உள்ளனர். மே 1 ம் தேதி 'வலிமை' படத்தின் ஃபஸ்ட்லுக் வெளியிடப்பட உள்ளது. 'வலிமை' படம் பற்றிய கூடுதல் தகவல்களை அறிய அனைவரும் ஆர்வமுடன் இருப்பது எனக்கு தெரியும். அதனால் ப்ரோமோஷன் பணிகளை சில ஸ்வாரஸ்யங்களுடன் செய்ய முடிவு செய்துள்ளேன்" என்றார்.

பாலிவுட் டிசைனரின் கைவண்ணத்தில் ஃபஸ்ட்லுக்
பாலிவுட்டின் புகழ்பெற்ற போஸ்டர் டிசைனரான ராகுல் நந்தா தான், 'வலிமை' படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை வடிவமைத்துள்ளார். இந்த போஸ்டர் அஜித் ரசிகர்களுக்கு நிச்சயமாக ஒரு விருந்தாக அமையும் என கூறப்படுகிறது.

போலீஸ் வேடத்தில் அஜித்
இந்த படத்தில் அஜித், போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். போதை பொருள் கடத்தல்காரர்களை எதிர்க்கும் போலீசாக அவர் நடித்துள்ளார். வில்லனாக கார்த்திகேயாவும், ஹீரோயினாக ஹூமா குரேஷியும் நடித்துள்ளனர். இவர்களுடன் ராஜ் ஐயப்பா, சுமித்ரா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











