வலிமை கதாநாயகி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரல்!
சென்னை : பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்து வருபவர் நடிகை ஹுமா குரேஷி.
தமிழில் பா ரஞ்சித் ரஜினிகாந்த் கூட்டணியில் இரண்டாவது திரைப்படமாக உருவான காலாவில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
இப்பொழுது அஜித் ஜோடியாக வலிமை திரைப்படத்தில் நடித்து வரும் ஹுமா குரேஷியின் லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்.

இரண்டாவது முறையாக கூட்டணி
இயக்குனர் பா ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான கபாலி திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தாலும் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றிப் பெற்றது இருப்பினும் இந்த கூட்டணி இரண்டாவது முறையாக மீண்டும் இணைந்த திரைப்படம் காலா. தாராவி தமிழ் மக்களை மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த்தின் காதலியாக நடித்திருந்தவர் ஹுமா குரேஷி.

காலாவின் ஜரினா
ஹிந்தியில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹுமா குரேஷி காலாவின் ஜரினா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இப்பொழுது அஜித்துக்கு ஜோடியாக வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அஜித்துக்கு ஜோடியாக
நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு அஜித் , வினோத் கூட்டணியில் தற்போது பரபரப்பாக வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது அனைத்து பணிகளும் முடிந்து இறுதிகட்டத்தை எட்டி இருக்கும் சூழலில் இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரோஷி நடித்து இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

வித்தியாசமான காஸ்டியூமில்
காலா, வலிமை உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த படங்களில் ஹுமா குரேஷி நடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் தாறுமாறு செய்து வருகிறது அந்த வகையில் இப்போது வித்தியாசமான காஸ்டியூமில் மனதை வருடும் புகைப்படங்களை ஹுமா குரேஷி பதிவிட்டு வைரலாகி வருகிறார்.


Click it and Unblock the Notifications











