வரிசையா லீக் ஆகுதே.. வலிமை படத்தின் இன்னொரு காட்சியும் கசிந்தது.. படக்குழு ஷாக்!

சென்னை: வலிமை படம் குறித்த தகவல்கள் பரம ரகசியமாக காக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அடுத்தடுத்து படம் சம்பந்தப்பட்ட காட்சிகள் லீக்காகி வருவது படக்குழுவிற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

Valimai Intro song massive update | Thala Ajith, Yuvan Shankar Raja, Vignesh Shivan

தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் ஒரு மணி நேர காட்சிகளே படம் ரிலீசுக்கு முன்னரே கசிந்ததை போல வலிமை படத்திற்கும் ஆகிவிடுமோ என்கிற அச்சமும் எழுந்துள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இதுபோன்ற கசிவுகளை படக்குழுவினரால் தடுக்கவும் இயலவில்லை.

செட் லோகேஷன் லீக்

செட் லோகேஷன் லீக்

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் இடம்பெற்ற அதாரு அதாரு பாடலை போல வலிமை படத்திலும் ஒரு அட்டகாசமான செலிபிரேஷன் ஓப்பனிங் சாங்கை இயக்குநர் எச். வினோத் தல ரசிகர்களுக்காக படமாக்க உள்ளார். அந்த பாடலுக்காக அமைக்கப்பட்டுள்ள செட் லோகேஷன் காட்சிகள் சமீபத்தில் கசிந்து வைரலானது.

யுவன் இசையில்

யுவன் இசையில்

வலிமை படத்தின் அப்டேட் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் எதுவுமே சொல்லாத நிலையில், முதன் முறையாக தல அஜித்தின் வலிமை படத்திற்கு இசையமைத்து வரும் யுவன் சங்கர் ராஜா தான் ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட்டை கொடுத்து அவர்களின் கவலைகளை போக்கினார்.

டிரெண்ட் செய்த ரசிகர்கள்

டிரெண்ட் செய்த ரசிகர்கள்

#ValimaiIntroSong என்ற ஹாஷ்டேக்கை போட்டு அஜித் ரசிகர்கள் லீக்கான போட்டோக்களையும் டிரெண்ட் செய்து வருகின்றனர். பொதுவாக இப்படி லீக் ஆகும் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்யாதீங்கன்னு தான் சொல்வாங்க, ஆனால், நீண்ட நாட்களாக அப்டேட் ஏதும் வராத நிலையில், லீக்காகும் போட்டோக்களை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

அந்த காட்சிகளே லீக்

யுவன் சங்கர் ராஜா இசையில், இயக்குநர் விக்னேஷ் பாடல் வரிகளை எழுதி ஸ்டூடியோவுக்குள் படமாக்கப்பட்ட லிரிக் வீடியோ காட்சிகளே தற்போது இணையத்தில் வேகமாக கசிந்து வருகின்றன. ஸ்டூடியோவுக்குள் சம்பந்தப்பட்ட ஆட்களை தவிர வேற யாரும் நுழைய முடியாத சூழலில் யார் இந்த போட்டோக்களை லீக் செய்தனர் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதுவரை படக்குழு சார்பாக அதிகாரப்பூர்வமாக எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஷூட் முடியப்போகுது

ஷூட் முடியப்போகுது

வலிமை படத்தின் ஷூட்டிங் வரும் பிப்ரவரி 15ம் தேதியுடன் இந்தியாவில் முடிய உள்ளதாகவும், ஸ்பெயின் நாட்டில் ஒரு ஸ்பெஷல் பைக் ஸ்டன்ட் காட்சி மட்டுமே பாக்கி உள்ளதாகவும் சமீபத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்ட அப்டேட்டால் ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர். ஆகஸ்ட் மாதம் வலிமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X