3 நாட்களிலேயே உலகளவில் 100 கோடி வசூலை ஈட்டிய வலிமை.. அஜித்தை பார்க்க தியேட்டருக்கு குவியும் மக்கள்!
சென்னை: வலிமை படத்திற்காக எந்தவொரு டூப்பும் போடாமல் நடிகர் அஜித் ஏகப்பட்ட சிரமங்களையும் விபத்துக்களையும் சந்தித்து சண்டைக் காட்சிகளில் நடித்த சுவாரஸ்ய தகவல்களை ஸ்டன்ட் இயக்குநர் திலீப் சுப்பராயன் தெரிவித்த நிலையில், நடிகர் அஜித்தை பார்க்க தியேட்டரில் மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது.
Recommended Video
வலிமை திரைப்படத்தில் அம்மா சென்டிமென்ட் காட்சிகள் ஒட்டவில்லை என விமர்சனங்கள் குவிந்த நிலையில், பெண்கள் கூட்டம் தற்போது வலிமை படத்தை நோக்கி படையெடுத்து வருகிறது.
இதன் காரணமாக முதல் 3 நாட்களிலேயே உலகளவில் வலிமை திரைப்படம் 100 கோடி வசூலை எட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் சிக்கிய அஜித்
நடிகர் அஜித் தனது வாழ்நாளில் ஏகப்பட்ட விபத்துகளை சந்தித்துள்ளார். அவரது உடல் முழுக்க பல காயங்களும் தையல்களும் தான் இருக்கின்றன. ஆனாலும், வலிமை படத்தில் டூப் போடாமல் ஸ்டன்ட் காட்சிகளில் நடித்து அசத்தி உள்ளார். ஒரு காட்சியில் 120 கி.மீ., வேகத்தில் அஜித் சென்றபோது வீலிங் செய்த நிலையில், அவர் கீழே விழுந்து அவருக்கு அடிபட்டது பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.

அஜித்துக்காக
நடிகர் அஜித் இந்த வயதிலும், தனது ரசிகர்களுக்காக கடினமான ஸ்டன்ட் காட்சிகளில் நடித்து அசத்தி உள்ளதை அறிந்த ரசிகர்கள் வலிமை படத்தை தியேட்டரில் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், இளைஞர்களை நல்வழிப்படுத்தும் கருத்துக்களையும் அஜித் சொல்லியுள்ளது அனைத்து தாய்மார்களையும் கவர்ந்துள்ளது.

100 கோடி வசூல்
உலகம் முழுவதும் வெளியான அஜித்தின் வலிமை திரைப்படம் வெறும் 3 நாட்களிலேயே 100 கோடி வசூலை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டிலேயே முதல் வார முடிவில் வலிமை திரைப்படம் 100 கோடி வசூலை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 150 கோடி பட்ஜெட்டில் வலிமை படம் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

3ம் நாள் வசூல்
அஜித் குமார், ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆக்ஷன் மற்றும் பாசத்தை ஹைலைட்டாக வைத்து வெளியான வலிமை திரைப்படத்தில் தொய்வை ஏற்படுத்திய 14 நிமிட காட்சிகளையும் படக்குழு நீக்கி உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் சனிக்கிழமை 22 கோடி முதல் 23 கோடி வசூல் வந்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் எவ்வளவு
தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல் 36.17 கோடி ரூபாய் என்றும் இரண்டாம் நாளில் 24.62 கோடி ரூபாய் என்றும் மூன்றாம் நாள் 23 கோடி ரூபாய் வசூல் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், மொத்தமாக தமிழ்நாட்டில் மட்டும் 83.79 கோடி ரூபாய் என்கின்றனர். ஞாயிற்றுக்கிழமையான இன்று நிச்சயம் 20 கோடிக்கும் அதிகமாக வசூல் வரும் என்பதால், முதல் வாரத்திலேயே 100 கோடி வசூலை வலிமை தட்டித் தூக்கும் என்பது கன்ஃபார்ம்.


Click it and Unblock the Notifications











