அடிச்சு தூக்கு...ட்விட்டர் டிரெண்டிங்கில் வலிமை மோஷன் போஸ்டர்
சென்னை : டைரக்டர் ஹச். வினோத் இயக்கத்தில் அஜித், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் படம் வலிமை. போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். 2 ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்து வந்தாலும் இதுவரை ஃபஸ்ட்லுக் போஸ்டரை கூட படக்குழு வெளியிடவில்லை. படப்பிடிப்பும் இன்னும் முடிந்தபாடில்லை.
வலிமை படப்பிடிப்பு துவங்கியது முதல் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்டு வருகிறார்கள். ஆனால் படக்குழு சத்தமில்லாமல் படத்தின் வேலைகளை கவனித்து வருகிறது. இதற்கு மேலும் ரசகர்களை காக்க வைக்க முடியாது என்பதால் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாக சமீபத்தில் டைரக்டர் வினோத் கூறினார்.

ரிலீஸ் தேதியுடன் வருதா
இதனைத் தொடர்ந்து இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகும். அதில் படத்தின் ரிலீஸ் தேதி இடம்பெற்றிருக்கும் என தகவல் பரவியது. தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய வலிமை குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

மரண மாஸாக வரும் மோஷன் போஸ்டர்
இதற்கிடையில் அஜித் மீண்டும் இளமையான லுக்கிற்கு திரும்பி இருப்பது போன்ற ஃபோட்டோ ஒன்று வெளியாகி, நேற்று முதல் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டிரெண்டிங்கான மோஷன் போஸ்டர்
ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளில் அதிகம் டிரெண்டிங் ஆக்கப்பட்ட விஷயங்களில் வலிமை தான் முன்னணியில் உள்ளது. இந்த நிலையில் இன்று, ValimaiMotionPoster , Valimai, Thala போன்ற ஹேஷ்டேகுகளை உருவாக்கப்பட்டு டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது. இதில் வலிமை மோஷன் போஸ்டரில் என்னென்ன விஷயங்கள் இடம்பெற்றிருக்கும் என்ற யுகங்களை அஜித் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

தொடருமா வலிமை சாதனை
ஃபஸ்ட்லுக் வெளியாவதற்கு முன்பே இந்திய அளவில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கில் வலிமை படம் சாதனை படைத்து விட்டது. அத்துடன் உலக அளவில் அனைத்து உரிமைகளின் வியாபாரமும் ரூ.200 கோடியை தாண்டி விட்டது. விரைவில் ரஜினியின் 2.0, விஜய்யின் பிகில் வியாபாரங்களை வலிமை படம் மிஞ்சி விடும் என கூறப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











