24 மணிநேரம் கூட ஆகல.. அதுக்குள்ள இந்திய அளவில் இப்படி ஒரு சாதனையா.. அதகளப்படுத்தும் வலிமை!

சென்னை: வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் 24 மணி நேரத்திற்குள் அசால்ட்டாய் ஒரு சாதனையை செய்து அசத்தியுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இப்படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கியுள்ளார்.

வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர்.

மோஷன் போஸ்டர்

மோஷன் போஸ்டர்

வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் பெரும் காத்திருப்புக்கு பின்னர் நேற்று மாலை ஒரு வழியாக வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது.

வலிமை படம் சாதனை

வலிமை படம் சாதனை

2 ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு இது பெரும் விருந்தாக இருந்தது. சமூக வலைதளங்களில் வலிமை ஃபர்ஸ்ட் லுக்கை கொண்டாடி தீர்த்து விட்டனர் அஜித் ரசிகர்கள். இந்நிலையில் இந்தியாவில் எந்தப் படமும் செய்யாத சாதனையை அஜித்தின் வலிமை படம் செய்துள்ளது.

அதிக லைக்ஸ்

அதிக லைக்ஸ்

அதாவது வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் இந்திய சினிமாவில் அதிகம் லைக் செய்யப்பட்ட மோஷன் போஸ்டர் என்ற சாதனையை படைத்துள்ளது. மோஷன் போஸ்டர் வெளியாகி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் 6 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்களை குவித்துள்ளது.

Recommended Video

Thala Ajith Fans அலப்பறை தாங்க முடியல | சாமி ஆடுபவரிடமே வலிமை அப்டேட்| Valimai
ட்ரென்டிங்கில் டாப்

ட்ரென்டிங்கில் டாப்

வலிமை படத்தின் இந்த சாதனையையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். #MostLikedIndianMPValimai என்ற ஹேஷ்டேக்கை கிரியேட் செய்து கொண்டாடி வருகின்றனர் அஜித் ரசிகர்கள். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரென்டிங்கில் டாப்பில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X