இந்தாங்க ஃபுல் அப்டேட்.. வலிமை படத்தின் மொத்த நடிகர்கள் லிஸ்ட்டையும் வெளியிட்ட படக்குழு!

சென்னை: இதுவரை வலிமை படத்தின் நாயகி யார் வில்லன் யார் என்பது தெரிந்தாலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லையே என ஏங்கிய ரசிகர்களுக்கு பிரஸ் ரிலீஸ் பண்ணி அனைத்து அப்டேட்களையும் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்காக காத்திருந்த ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் நோக்கில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மோஷன் போஸ்டராக வெளியிட்டுள்ளோம்.

நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு இது பிடிக்கும் என நம்புகிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் வலிமை படம் வெளியாகும் என போனி கபூர் தெரிவித்துள்ளார்.

மோஷன் போஸ்டர் ரிலீஸ்

மோஷன் போஸ்டர் ரிலீஸ்

ரசிகர்கள் இரண்டு ஆண்டு காலமாக காத்திருந்த வலிமை படத்தின் அப்டேட் வெளியாகி விட்டது. இப்படியொரு மெர்சலான சம்பவத்திற்காக இன்னும் சில நாட்கள் கூட அஜித் ரசிகர்கள் காத்திருக்க தயாராக இருந்த நிலையில், இன்றே மோஷன் போஸ்டரையும் ஃபர்ஸ்ட் லுக்கையும் போனி கபூர் வெளியிட்டு புண்ணியம் கட்டிக் கொண்டார்.

இந்த ஆண்டுக்குள்

இந்த ஆண்டுக்குள்

மேலும், வலிமை படத்தின் ஷூட்டிங் முழுவதும் நிறைவு பெற்று விட்டதாக பிரஸ் ரிலீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில நாட்கள் ஷூட்டிங் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் வலிமை படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர். தீபாவளி வெளியீடாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஜி ஸ்டூடியோஸ்

ஜி ஸ்டூடியோஸ்

போனி கபூரின் பே வியூ ப்ராஜெக்ட்ஸ் உடன் இணைந்து ஜீ ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. தியேட்டரில் படம் ரிலீசான பிறகு ஜீ5 ஒடிடி தளத்தில் வலிமை படம் வெளியாகும் என்பது இதன்மூலமாக உறுதியாகி விட்டது.

யார் யார்

யார் யார்

தல அஜித்தின் வலிமை படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, பாணி, சுமித்ரா, அச்சுந்த் குமார், ராஜ் அய்யப்பா, குக் வித் கோமாளி பிரபலம் புகழ் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படக்குழு

படக்குழு

மேலும், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில், நிரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டியின் எடிட்டிங்கில் திலீப் சுப்புராயன் ஸ்டன்ட்டில் கதிரின் கலை வண்ணத்தில் வலிமை உருவாகி வருவதாக தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Read more about: valimai ajith வலிமை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X