தீபாவளிக்கு வெளியாகிறதா வலிமை படம்... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை : அஜித்தின் வலிமை படம் கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஜூலையில் துவங்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு அம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் தேதியை கூடிய விரைவில் தயாரிப்பு தரப்பு வெளியிட உள்ளதாக தெரிகிறது.

அப்டேட் இல்லாமல் சஸ்பென்ஸ்
தல அஜித்குமாரின் வலிமை படம் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வருகிறது. வரும் ஜூலையில் எஞ்சியுள்ள சில காட்சிகளை எடுத்து படப்பிடிப்பை நிறைவு செய்ய வினோத் திட்டமிட்டுள்ளார். இந்த படத்தின் அப்டேட் எதுவும் வெளியிடாமல் படக்குழுவினர் ரசிகர்களை சஸ்பென்சிலேயே வைத்துள்ளார்.

எச் வினோத் இயக்கம்
ஆயினும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகியவை சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் அவரே இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த மாதத்தில் நிறைவு
இந்த படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் நிறைவு செய்யப்படும் என்று கூறப்படும் நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் பாலிவுட்டில் செய்யப்படுவது போல படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் தேதியை ஒன்றாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்ணாத்தே படத்துடன் மோதல்
தீபாவளி ரிலீசாக இந்த படம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்தே படம் தீபாவளியையொட்டி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படமும் ரிலீசானால் போட்டி பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











