“ஒரே அழுகாச்சியா வருது“ … வலிமை படத்தை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ் !
சென்னை : நடிகர் அஜித் நடிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவான வலிமை திரைப்படம் நேற்று உலகமெங்கும் வெளியாகி உள்ளது. இப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார்.
படத்தில் நடிகர் அஜித்துடன் பிரபல இந்தி நடிகை ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
வலிமை திரைப்படம் தியேட்டரில் வெளியான நிலையில், முன்னதாக தியேட்டர் வளாகங்கள் முன் குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து, நடனம் ஆடி திருவிழா போல் கொண்டாடினர். மேலும் அஜித்துக்கு கட்அவுட் வைத்து மாலை போட்டும் அலங்கரித்தார்கள். அதோடு பால் அபிஷேகம் செய்தும் மகிழ்ந்தனர்.

வலிமை மைனஸ்
வலிமை திரைப்படத்தைப்பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வரும் நேரத்தில், ஒரு சில ரசிகர்கள், படம் சொல்லும் அளவுக்கு இல்லை, அஜித்தின் பைக் ரேசுக்காக மட்டுமே வலிமை படத்தை பார்க்கலாம் என்று கூறி வருகின்றனர். தேவையில்லாத இடத்தில் பேசிய பஞ்ச் டயலாக்கும் , சம்பந்தமே இல்லாத சண்டைக்காட்சிகள், சென்டிமென்ட் அழுகைகள் இந்த படத்தின் மிகப்பெரிய மைனஸ் என கூறிவருகின்றனர்.

எச்.வினோத் எல்லாரையும் செஞ்சிட்டாருனு
வலிமை படத்தை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். அதில் எச் வினோத் எல்லாரையும் செஞ்சிட்டாருனு வடிவேலு அழுவது போல மீம்ஸ் போட்டுள்ளனர். இந்த மீம்ஸ் பல லைக்குகளை பெற்றுள்ளது.

முதல் பாதி மாஸ்டர்
வலிமை அப்பேட் எப்ப வரும், எப்ப வரும்னு கேட்டு கேட்டு வெறுத்துப்போன ரசிகர்கள் படத்தைப்பார்த்து கொண்டாடுவார்கள் என்று பார்த்த தாறுமாறாக கலாய்ந்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

அழுகாச்சியா வருது
தமிழ் படங்களின் உயிர் நாடியே சென்டிமென்ட்தான், ஆனால் அதுவும் ஓரளவுக்கு தானே, காரணமே இல்லாமல் படத்தில் அழுகாச்சியை புகுத்தினால் ரசிகர்கள் இப்படித்தான் மீம்ஸ் போட்டு கலாய்ப்பாங்க.
Recommended Video

உள்ளத்தில் நல்ல உள்ளம்...
ஹாலிவுட்டுக்கே சவால் விடும் அளவுக்கு சண்டை, பைக் ரேசிங்கில் மிரட்டிட்டு கடைசில இப்படி ஆகிபோச்சே என்பதுபோல கர்ணன் சிவாஜியையும் அஜித்தையும் போட்டு ஒரு மீம்சை உருவாக்கி உள்ளார். இந்த மீம்ஸ் பல லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











