கலக்கல் அஜித் புகைப்படங்கள் வெளியீடு... எவ்ளோ அழகா சிரிக்கறாரு!
சென்னை : நடிகர் அஜித்தின் வலிமை படம் வரும் 24ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி தினந்தோறும் ரசிகர்களுக்கு திருவிழாவாக அடுத்தடுத்த அப்டேட்கள், பிரமோஷன் வீடியோக்கள் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது படக்குழு.
இன்றைய தினமும் அஜித்தின் புதிய ஸ்டில்களை வெளியிட்டுள்ளது.

நடிகர் அஜித்
நடிகர் அஜித்குமார், ஹுமா குரேஷி லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் வலிமை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார் அஜித். படத்தை எச் வினோத் இயக்கியிருந்தார். போனிகபூர் தயாரித்திருந்தார்.

2வது முறையாக கூட்டணி
இந்நிலையில் தற்போது அதே கூட்டணியில் மீண்டும் அஜித் வலிமை படத்தின் மூலம் இணைந்துள்ளார். இந்தப் படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருக்கிறது. கடந்த பொங்கலுக்கு கொண்டாட்டத்துடன் வெளியாக இருந்தது வலிமை. ஆனால் கொரோனா பரவல் காரணமாக படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

தள்ளிப் போன ரிலீஸ்
கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகளில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதையடுத்தே வலிமை படத்தின் ரிலீசை தள்ளி வைக்கும் முடிவிற்கு தயாரிப்பாளர் போனி கபூர் வந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

24ம் தேதி ரிலீஸ்
இந்நிலையில் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தற்போது படம் வரும் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அது மட்டுமின்றி, தமிழ் தவிர்த்து மற்ற மொழிகளிலும் படம் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது. இந்த விஷயம் அஜித்தின் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

போனி கபூர் உறுதி
திரையரங்குகளில் 50 சதவிகித பார்வையாளர்களே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயினும் தொடர்ந்து ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்க கூடாது என்பதில் போனி கபூர் உறுதியாக உள்ளார். மேலும் தற்போது ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவிழாக் கொண்டாட்டம்
இதையடுத்து அஜித் ரசிகர்கள் இந்த ரிலீசை திருவிழாக் கொண்டாட்டமாக்க காத்திருக்கின்றனர். இது மட்டுமின்றி தொடர்ந்து பிரமோஷன் பணிகளை மிகவும் சிறப்பாக போனி கபூர் மேற்கொண்டு வருகிறார். தினந்தோறும் படத்தின் அப்டேட் என்பது உறுதியாகியுள்ளது.

தினந்தோறும் அப்டேட்
தொடர்ந்து படத்தின் போஸ்டரை வெளியிட்டு வருகிறது படக்குழு. இன்றைய தினமும் அஜித்தின் வித்தியாசமான போஸ்கள் மற்றும் அதன் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வித்தியாசமான, மிரட்டும் போஸ்களில் உள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications











