வாவ்.. இணையத்தில் லீக்கான வலிமை பட அஜித்தின் ஃபேமிலி போட்டோ.. தெறிக்கும் டிவிட்டர்!

சென்னை: வலிமை படத்தில் இடம் பெறும் அஜித்தின் குடும்ப போட்டோ இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் வலிமை.

நேர்கொண்ட் படத்தை தயாரித்த போனிகபூர்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார்.

போலீஸாக அஜித்

போலீஸாக அஜித்

இந்தப் படம் ஒரு ஆக்ஷன் படம் என்றும் இதில் அஜித்போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. மேலும் பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுவதாக தகவல் பரவியது. அதன் போட்டோக்களும் வெளியானது.

ரசிகர்கள் கெஞ்சல்

ரசிகர்கள் கெஞ்சல்

இப்படம் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அப்டேட்டும் வெளியிடப்பட வில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூரிடமும் இயக்குநர் வினோத்திடமும் அவ்வப்போது வலிமை படம் குறித்த அப்டேட்டை கேட்டு வந்தனர்.

மீண்டும் தொடங்கிய ஷுட்டிங்

மீண்டும் தொடங்கிய ஷுட்டிங்

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் மீண்டும் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நடிகர் அஜித் நடிக்கும் காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது.

அஜித்துக்கு காயம்

அஜித்துக்கு காயம்

இதில் அஜித்துக்கு காயம் ஏற்பட்டதாகவும் அதைக்கூட பொருட்படுத்தாமல் அஜித் படப்பிடிப்பில் பங்கேற்றதாகவும் கூறப்பட்டது. வலிமை திரைப்படத்தின் மீண்டும் தொடங்கியதை அடுத்து படம் குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு அஜித் ரசிகர்கள் போராட்டம் நடத்தாத குறையாக கேட்டு வந்தனர்.

காத்திருக்கவும்

காத்திருக்கவும்

இதனை தொடர்ந்து நடிகர் அஜித் மற்றும், தயாரிப்பாளரான போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து ‘வலிமை' படத்தின் அப்டேட் குறித்து முடிவெடுத்து, தகுந்த நேரத்தில் வெளியிடுவார்கள்.முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும் என கோரிக்கை விடுத்தது படக்குழு.

Recommended Video

தல Ajith unseen Drone Training Video • Dhaksha Team
அஜித் குடும்ப போட்டோ

அஜித் குடும்ப போட்டோ

இதனால் நிச்சயம் வலிமை படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என காத்திருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில், வலிமை படத்தில் அஜித் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.

ட்ரெண்டிங்கில் டாப்

இந்த போட்டோவை அஜித ரசிகர்கள் ட்விட்டரில் ஷேர் செய்து வருகின்றனர். மேலும் #Valimaiதிருவிழாஆரம்பம் என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்த ஹேஷ் ட்ரெண்டிங்கில் டாப்பில் உள்ளது.

ஓபனிங் சாங்..

மேலும் வேறமாறி வாழு.. வாழவிடு.. உன் எண்ணம் போல் தான் உன்.. என்ற வரிகளுடன் வலிமை படத்தின் ஓபனிங் பாடல் இருப்பதாக ஒரு வதந்தி பரவி வருவதாகவும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X