அஜித் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி... ஆகஸ்ட்டில் வெளியாகும் சிங்கிள் ட்ராக் மற்றும் டீசர்
சென்னை : நடிகர் அஜித்தின் நடிப்பில் எச் வினோத் இயக்கியுள்ள படம் வலிமை.
இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஆகஸ்ட்டில் படத்தின் சிங்கிள் ட்ராக் மற்றும் டீசர் உள்ளிட்டவை அடுத்தடுத்து வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலிமை படம்
நடிகர் அஜித், ஹுமா குரோஷி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் வலிமை. எச் வினோத் இயக்கியுள்ளார். இந்த படத்தின் சூட்டிங் கடந்த 2019ல் துவங்கிய நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக ரசிகர்களுக்கு எந்தவித அப்டேட்டையும் தராமல் படக்குழு ஏமாற்றி வந்தது.

இங்கிலாந்தில் சூட்டிங்
தற்போது படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே பாக்கியுள்ளதாகவும் இதற்கென கிழக்கு இங்கிலாந்துக்கு படக்குழுவினர் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் உள்ளிட்டவை அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன.

ஆகஸ்ட்டில் வெளியீடு
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் அடுத்தடுத்து சிங்கிள் ட்ராக் மற்றும் டீசர் உள்ளிட்டவை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பாடல் ஆகஸ்ட் 10ம் தேதியும் டீசர் 15ம் தேதியும் ரிலீசாக உள்ளது. தொடர்ந்து படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் ஆகியவையும் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்
வலிமை படம் தீபாவளியையொட்டி நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்தே படமும் அன்றைய தினம் ரிலீசாக உள்ள நிலையில் இரண்டு படங்களும் ரசிகர்களுக்கு சிறப்பான கொண்டாட்டத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











