ஜூலை இறுதியில் வலிமை படத்தின் சூட்டிங் துவக்கம்... படக்குழு வெளியிட்ட அப்டேட்

சென்னை : கொரோனா பாதிப்பு காரணமாக அஜித்தின் வலிமை படத்தின் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில காட்சிகளே இந்த படத்தில் மீதமுள்ளதாக படக்குழு தரப்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜூலை மாத இறுதியில் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

வலிமை படம்

வலிமை படம்

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கிவரும் வலிமை படத்தை தயாரித்து வருகிறார் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா தாக்கம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் குறித்து படக்குழு அப்டேட் வெளியிட்டுள்ளது.

பாடல்கள் குறித்து அப்டேட்

பாடல்கள் குறித்து அப்டேட்

யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் இரு பாடல்கள் குறித்து அவர் கலந்துரையாடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அஜித்தின் டைட்டில் பாடல் மற்றும் அம்மா சென்டிமெண்ட் பாடல் என முக்கியமான இரண்டு பாடல்கள் குறித்து அவர் அப்டேட் வெளியிட்டிருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மீண்டும் சூட்டிங்

மீண்டும் சூட்டிங்

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படத்தின் சூட்டிங் ஜூலை இறுதி வாரத்தில் துவங்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்த காட்சிகள் வெளிநாட்டில் படமாக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவிலேயே இதன் சூட்டிங் நடத்தப்படலாம் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

படப்பிடிப்பு முடியும்

படப்பிடிப்பு முடியும்

இதனிடையே ஜூலை மாத இறுதியில் துவங்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து எந்தவகையான அப்டேட்டும் வெளியாகாத நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின்போது அஜித் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் என்று பதாகை ஒன்றின் மூலம் கேட்டது வைரலானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X