நள்ளிரவு 1 மணிக்கு ரிலீஸாகும் வலிமை படம்.. முதல் நாள் வசூலில் ரெக்கார்டு பிரேக் செய்ய பலே திட்டம்!
சென்னை: தமிழகத்தில் அஜித்தின் வலிமை படத்தை நள்ளிரவு ஒரு மணிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை அஜித். நடிகர் அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் விலமை படத்தில் நடித்து வருகிறார்.
'வலிமை' மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய படங்களில் ஒன்றாகும், மேலும் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவர உள்ளது.

ஸ்பெஷல் ஷோக்கள்
இந்நிலையில் இப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி வலிமை படம் முதல் நாள் வசூலில் ரெக்கார்டு பிரேக் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. 'வலிமை' படத்தின் ஸ்பெஷல் ஷோக்களுக்கு அனுமதி பெறும் வேலையில் ஈடுபட்டுள்ளது படக்குழு.

நள்ளிரவு 1 மணிக்கு
இதற்காக நள்ளிரவு 1 மணிக்கு முதல் காட்சியை வைக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் முதல் நாளிலேயே படத்திற்கு அதிக ஷோக்கள் கிடைக்கும். இதன் மூலம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை குவித்து சாதனை படைக்க முடியும் என்பதால் படக்குழு சிறப்புக் காட்சிக்கு அனுமதி பெற தீவிரமாக உள்ளது.

சிங்கிள் டிராக் அம்மா பாடல்
இதனிடையே படத்தின் சரியான ரிலீஸ் தேதி விரைவில் சிறப்பு போஸ்டருடன் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. வலிமை படத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதிய இரண்டாவது சிங்கிள் டிராக் அம்மா பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

போலீஸ் டிராமா படம்
'வலிமை' திரைப்படம் சட்டவிரோதமாக நடைபெறும் ரேஸைக் கையாளும் ஒரு போலீஸ் டிராமா படம் ஆகும். மேலும் இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தில் அஜித், கார்த்திகேயா, ஹுமா குரேஷி, யோகி பாபு, சுமித்ரா மற்றும் ராஜ் ஐயப்பா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸுடன் இணைந்து போனி கபூரின் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் எல்எல்பி தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











