தமிழ் புத்தாண்டிற்கு ரிலீசாகிறதா வலிமை படம்... விரைவில் அப்டேட்
சென்னை : நடிகர் அஜித்குமாரின் வலிமை படம் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில தற்போது அடுத்ததாக படம் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

வலிமை படம்
நடிகர் அஜித்குமார், ஹுமா குரோஷி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் வலிமை. அஜித் நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக படங்கள் எதுவும் ரிலீசாகாத நிலையில் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.

வைரலான டீசர், ட்ரெயிலர்
எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது. படத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி வைரலானது. மேலும் படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் குறித்த போஸ்டர்களும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

3வது முறையாக இணையும் கூட்டணி
நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு மீண்டும் அஜித் -வினோத் மற்றும் போனிகபூர் கூட்டணி இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்ததும் படத்தின் எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்தது. தற்போது இந்தக் கூட்டணி 3வது முறையாகவும் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தள்ளிப் போன ரிலீஸ்
வலிமை படம் கடந்த தீபாவளிக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுகுறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது. இதையடுத்து படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் கொரோனா, ஓமிக்ரான் பரவல் காரணமாக தற்போது அதன் ரிலீஸ் தேதி மேலும் தள்ளிப் போயுள்ளது.

அஜித் ரசிகர்கள் ஏமாற்றம்
இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் படம் தற்போது ஏப்ரல், மே மாதங்களில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழ் புத்தாண்டில் படம் ரிலீசாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ரிலீஸ் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











