வலிமை பட வில்லன் நடிகருக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. தீயாய் பரவும் போட்டோஸ்!

ஹைத்ராபாத்: வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் நடிக்ர காத்திகேயாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

தெலுங்கில் இளம் ஹீரோவாக வலம் வருபவர் கார்த்திகேயா. 2017 ஆம் ஆண்டு வெளியான பிமேதோ மீ கார்த்திக் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து ஆர்எக்ஸ் 100 என்ற படத்தில் நடித்தார் கார்த்திகேயா. இந்தப் படம் பெரும் ஹிட்டானது. இதன் மூலம் பெரும் பிரபலமானார் கார்த்திகேயா.

வலிமையில் அஜித்துக்கு வில்லனாக

வலிமையில் அஜித்துக்கு வில்லனாக

தொடர்ந்து ஹிப்பி, குணா 369, கேங்க் லீடர், 90 எம்எல், சாவு கபூரு சல்லகா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது அஜித்தின் வலிமை படத்தில் நடித்து வருகிறார் கார்த்திகேயா. முதல் முறையாக தமிழில் நடிக்கும் கார்த்திகேயா, வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கிறார்.

நடிகர் கார்த்திகேயாவுக்கு திருமண நிச்சயம்

நடிகர் கார்த்திகேயாவுக்கு திருமண நிச்சயம்

கார்த்திகேயா தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கெஸ்ட்டாக பங்கேற்றார். இந்நிலையில் நடிகர் கார்த்திகேயாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நடிகர் கார்த்திகேயாவின் நிச்சயதார்த்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெற்றோரால் முடிவு செய்யப்பட்ட திருமணம்

பெற்றோரால் முடிவு செய்யப்பட்ட திருமணம்

இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த திருமணம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று கூறப்படுகிறது. மேலும் அவரது வருங்கால மனைவி பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

திருமண தம்பதி குடும்ப போட்டோ

திருமண தம்பதி குடும்ப போட்டோ

நிச்சயதார்த்த விழாவின் முதல் போட்டோ அனைத்து சமூக ஊடக தளங்களிலும் வைரலாகி வருகிறது. படத்தில், நிச்சயதார்த்த தம்பதியினர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதாக உள்ளது.

ராஜ விக்ரமார்க்கா படத்தில் கார்த்திகேயா

ராஜ விக்ரமார்க்கா படத்தில் கார்த்திகேயா

இந்த போட்டோவை பார்த்த ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நடிகர் கார்த்திகேயா, ராஜ விக்ரமார்க்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் என்ஐஏ அதிகாரியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X