முன்பதிவிலேயே மாஸ்டர் படத்தை பீட் செய்த வலிமை... வேற லெவல் அப்டேட்!

சென்னை : நடிகர் அஜித்குமார் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வரும் 24ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள படம் வலிமை.

இந்தப் படம் ஏராளமான சிறப்பம்சங்களுடன் ரசிகர்களை சந்திக்க உள்ளது.

ரசிகர்களும் வலிமை திருவிழாவை கொண்டாட காத்திருக்கின்றனர்.

வலிமை படம்

வலிமை படம்

நடிகர் அஜித்குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் 24ம் தேதி ரசிகர்களை சந்திக்க உள்ளது வலிமை படம். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. முதல்முறையாக பான் இந்தியா படமாக வெளியாகும் அஜித்தின் படம் இது.

4000 திரையரங்குகளில் ரிலீஸ்

4000 திரையரங்குகளில் ரிலீஸ்

இந்நிலையில் இந்தப் படம் வெளிநாடுகளிலும் தனது அதிரடியை காட்ட உள்ளது. உலகெங்கிலும் 4000 திரையரங்குகளில் ஒரே நேரத்தில் படம் ரிலீசாக உள்ளது. இவ்வளவு திரையரங்குகளில் ரிலீசாகும் அஜித்தின் முதல் படமும் இதுதான். இதையடுத்து இந்தப்படம் வசூலில் சிறப்பான சாதனை படைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சிறப்பான முன்பதிவு

சிறப்பான முன்பதிவு

தற்போது படத்தின் முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. ரசிகர்கள் முண்டியடித்து டிக்கெட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். படத்தில் பாடல்கள், டீசர், ட்ரெயிலர் மட்டுமின்றி தினந்தோறும் பிரமோக்களையும் தயாரிப்பாளர் தரப்பு வெளியிட்டு வருகிறது. இதையடுத்து படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.

முதல் ஷோவை பார்க்க வெயிட்டிங்

முதல் ஷோவை பார்க்க வெயிட்டிங்

இதனால் படத்தை முதல்நாள் முதல் ஷோவில் பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் பரபரத்து காணப்படுகின்றனர். இயக்குநர் வெங்கட் பிரபுவும் முதல்நாள் முதல் ஷோவிற்கான டிக்கெட்டுகளை வாங்கிவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறை பிரபலங்களும் படத்திற்காக காத்திருப்பது தெரியவருகிறது.

மாஸ்டர் படத்தை பீட் செய்த வலிமை

மாஸ்டர் படத்தை பீட் செய்த வலிமை

உலகளவில் படத்தின் முன்பதிவுகள் துவங்கி ஹவுஸ்புல்லாகி வருகிறது. தற்போது ப்ரான்ஸில் மாஸ்டர் படத்தின் வசூலை முதல் நாளே வலிமை தாண்டியதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. வசூலில் எப்போதுமே முண்டியடிக்கும் விஜய்யின் படத்தை அஜித்தின் வலிமை தற்போது பீட் செய்துள்ளது அஜித் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாக உள்ளது.

பிரான்சில் வலிமை

பிரான்சில் வலிமை

அதே நேரத்தில் மாஸ்டர் வெளியாகும் போது ப்ரான்ஸ் நாட்டில் கொரொனா தாக்கம் காரணமாக கடும் கட்டுப்பாடு இருந்தது. அதனால் குறைந்த அளவிலான திரையரங்குகளிலேயே மாஸ்டர் படம் ரிலீசானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே, வலிமை படத்தின் மற்றொரு சிறப்பான விஷயத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

தி கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் ரிலீஸ்

தி கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் ரிலீஸ்

உலகளவில் பிரபலமான பாரீசின் தி கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் அஜித்தின் வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 25ம் தேதி திரையிடப்போவதாக தியேட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இங்கு ஒரு டிக்கெட்டின் விலை ரூ.1690 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X