போனி கபூரின் பிரம்மாண்ட பட ரீமேக்கில் உதயநிநிதி...ஹீரோயின் இவர் தான்

சென்னை : 2019 ம் ஆண்டு முதல் தமிழ் படங்களை தயாரித்து வெற்றி கண்டு வருகிறார் போனி கபூர். ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த, நேர் கொண்ட பார்வை படம், போனி கபூருக்கு வசூலை அள்ளித் தந்தது. பேவியூ ப்ரோஜெக்ட்ஸ் எல்எல்பி என்ற பேனரில் போனி கபூர் இந்த படத்தை தயாரித்தார்.

நேர் கொண்ட பார்வை வெற்றியைத் தொடர்ந்து அதே கூட்டணி மீண்டும் மற்றொரு படத்தில் இணைந்துள்ளது. வலிமை என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அஜித் நடிக்கிறார். ஹச்.வினோத் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

காத்திருக்கு வலிமை படக்குழு

காத்திருக்கு வலிமை படக்குழு

இந்த படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிவடைந்த நிலையில், வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய சண்டைக்காட்சி மட்டும் மீதம் உள்ளது. அத்துடன் படத்தின் சூட்டிங் முழுவதும் முடிவடைய உள்ளது. ஆனால் கொரோனா பரவலால், அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அஜித் பிறந்தநாளில் ஃபஸ்ட்லுக்

அஜித் பிறந்தநாளில் ஃபஸ்ட்லுக்

இதற்கிடையில் அஜித்தின் 50 வது பிறந்த நாளான மே 1 ம் தேதி அன்று வலிமை படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து டீசர், டிரைலர் என வெளியிட்டு, இந்த ஆண்டு இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ரீமேக் படத்தில் உதயநிதி

ரீமேக் படத்தில் உதயநிதி

இந்நிலையில், ஆர்டிக்கிள் 15 படத்தின் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார் என கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழ் ரீமேக்கை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தில் ராகுல் இந்த படத்தை தயாரிக்கிறார்.

Recommended Video

Thala Ajith in AUTO | Chennaiயில் Autoவில் வலம்வரும் Thala | Valimai
உதயநிதிக்கு ஜோடியாகும் தன்யா

உதயநிதிக்கு ஜோடியாகும் தன்யா

ஆர்டிக்கிள் 15 படத்தை இந்தியில் ஜீ ஸ்டூடியோசுடன் இணைந்து போனி கபூரின் பேவியூ ப்ரோஜெக்ட் நிறுவனம் தான் தயாரித்தது. தற்போது லேட்டஸ்ட் தகவலாக, பெயரிடப்படாத இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்.இந்த தகவலை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X